எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலையை திறந்துவைத்த உதயநிதி ஸ்டாலின்!

- Muthu Kumar
- 12 Feb, 2025
சென்னை நுங்கம்பாக்கத்தில் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் வைத்து பெயர் பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் சாலை என பெயர் வைக்க வேண்டும் என்று எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் தமிழ்நாடு முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் போற்றும் வகையில் எஸ்பிபி சரண் கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களுடைய வீடு அமைந்துள்ள சாலைக்கு அவருடைய பெயரை நினைவாக வைப்பதற்கு உத்தரவளித்து அரசாணை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் ரசிகனாக அவருடைய பெயரை அவர் வாழ்ந்த சாலைக்கு வைப்பதில் பெருமிதம் கொள்வதாக கருத்து தெரிவித்து அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலை புதிதாக அமைக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் சாலை என்கிற பெயர் பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்பு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குடும்பத்தாருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாடினார்.
நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எஸ்பி பாலசுப்ரமணியன் மறைந்த சாலைக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு என்பது யாரும் மறக்க முடியாத நினைவுகள், அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தால் அவர் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். மணிமண்டம் குறித்து நேரடியாக எஸ்பிபி சரணிடம் கேட்டு அது குறித்து முடிவு செய்வோம்" என தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *