முட்டாள்கள் இன்னும் போர் விமானங்களை உருவாக்குகிறார்கள்-எலான் மஸ்க்!

- Muthu Kumar
- 26 Nov, 2024
ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
டிரம்பின் புதிய அரசில் டிரம்புக்கு ஆலோசனை வழங்கும் செயல்திறன் துறையின் இணைத் தலைவராக எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் போர் விமானங்களை, ஆளில்லா விமானங்களாக (ட்ரோன்) மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அவர், போர் விமானங்களால் விமானிகள் கொல்லப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மனிதர்களை ஏற்றிச் செல்லும் போர் விமானங்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து மஸ்க் சந்தேகம் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. 2020ம் ஆண்டில், பாரம்பரிய போர் விமானங்களின் சகாப்தம் முடிவுக்கு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
2015ம் ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த போர் விமானமான F-35-ஐ மஸ்க் விமர்சித்துள்ளார். நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடும் காணொளியை எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ''சில முட்டாள்கள் இன்னும் போர் விமானங்களை உருவாக்குகிறார்கள்," என பதிவிட்டு இருப்பது பேசும் பொருளாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *