லாரி விபத்தில் இருவர் பலி! ஓட்டுநர் படுகாயம்!

top-news

மே 19,

கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி விபத்துக்குள்ளானதில் உதவியாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இன்று காலை 10.04 மணியளவில் விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் விபத்து ஏற்பட்ட Pan Borneo நெடுஞ்சாலைக்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாக சரவாக் மாநில மீட்பு ஆணையச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட லாரி பிந்துலூவிலிருந்து மீரிக்கு உரம் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்புச் சுவரை மோதி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த உதவியாளர்கள் மீது உரம் மூட்டைகள் விழுந்து அவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் படுகாயம் அடைந்த நிலையில் லாரி ஓட்டுநரும் பிந்துலு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dua pembantu lori maut di tempat kejadian selepas lori membawa baja hilang kawalan dan terbalik di Lebuhraya Pan Borneo, Sarawak. Pemandu lori cedera parah dan dikejarkan ke Hospital Bintulu menurut pihak bomba negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *