பேரிடர் காலத்தில் மின் சாதனங்கள், எரிவாயு தொடர்பாக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்து!
- Shan Siva
- 16 Oct, 2024
புத்ராஜெயா, அக் 16: வெள்ளப் பேரிடர் காலகட்டத்தில் சாய்ந்து விழும் மின்கம்பங்கள், உடைந்த மின்கம்பிகள், மின் மற்றும் எரிவாயு சாதனங்கள் சேதமடைதல் உள்ளிட்ட பல்வேறு
ஆபத்துகள் ஏற்படுவதால், வெள்ளக்
காலங்களில் விழிப்புடன் இருக்குமாறும் , மின் மற்றும் எரிவாயு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் பொதுமக்கள்
நினைவூட்டப்படுகிறார்கள்.
எரிசக்தி ஆணையம்
(ST) இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில், வெள்ளத்திற்கு
முன்பும், வெள்ளத்தின்
போதும், பின்பும் மக்கள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
வெளியேற்றம்
தேவைப்பட்டால், வெள்ளநீரில்
இருந்து பாதுகாப்பான உயரமான இடங்களில் மின் சாதனங்களை பொதுமக்கள் சேமித்து
வைத்திருப்பதை உறுதிசெய்து, மின் விநியோகந்த்தின்
மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும் என்று எஸ்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.
சோலார் PV
அமைப்புகள் அல்லது மின்சார வேலிகள் போன்ற
தனித்தனியாக இணைக்கப்பட்ட மின் நிறுவல்களும் பிரதான சுவிட்சில் இருந்து அணைக்கப்பட
வேண்டும், மேலும் எரிவாயு
சிலிண்டர் அல்லது குழாய் எரிவாயு வால்வுகள் மூடப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறுந்து விழுந்த
மின்கம்பங்கள், துண்டிக்கப்பட்ட
கம்பிகள் போன்றவற்றை நகர்த்த வேண்டாம் என்றும், உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும்
பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ளத்திற்குப் பிறகு, மின் விநியோக வாரியத்தின் மெயின் சுவிட்ச் மற்றும் எரிவாயு
வால்வு எந்த துப்புரவுப் பணியையும் தொடங்குவதற்கு முன்பு 'ஆஃப்' நிலையில் இருக்க
வேண்டும்.
மெயின் சுவிட்சை
மீண்டும் 'ஆன்' செய்யும் முன், மின் சாதனங்கள் நல்ல மற்றும் வறண்ட நிலையில் இருப்பதை உறுதி
செய்து கொள்ளவும், மின் கம்பிகள்,
மின் நிறுவல்கள் மற்றும் குழாய் எரிவாயு
அமைப்புகளுக்கு அருகில் சுத்தம் செய்யும் போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும்
என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *