PKR தலைமைத்துவ கவுன்சில் தேர்தல் ஒத்திவைப்பு!

- Shan Siva
- 02 May, 2025
கோலாலம்பூர், மே 2: பிகேஆர் தனது
மத்திய தலைமைத்துவ கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஒத்திவைத்துள்ளது.
வேட்புமனுக்கள்
மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இருந்து மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பிகேஆர் மத்திய
தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
வேட்புமனுக்கள்
செயல்முறை முழுமையாக ஆன்லைனில் நடைபெறும் என்று அவர் ஒத்திவைப்புக்கான காரணத்தை
வெளியிடாமல் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பிளாக்செயின்
அடிப்படையிலான வாக்களிப்பு முறை செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பிகேஆரின் பிரதேசத் தேர்தல்களில்
தலைதூக்கியுள்ளன, அதே நேரத்தில் புகார்களை ஆராய கட்சி சுயாதீன
தணிக்கையாளர்களை நியமித்துள்ளது.
பிகேஆர் துணைத்
தலைவர்கள் நிக் நஸ்மி நிக் அகமது மற்றும் கே சரஸ்வதி, துணை அமைச்சர்கள் அக்மல் நாசிர் மற்றும் ஆடம் அட்லி, மற்றும் பல எம்.பி.க்கள், சட்டமன்ற
உறுப்பினர்கள் உட்பட பல பெரிய தலைகள் தோல்வியடைந்தன.
இந்த முக்கிய நபர்களில் சிலர், பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ராம்லியின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. அவர் சில நாட்கள்" விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
PKR menangguhkan pencalonan untuk pemilihan Majlis Pimpinan Pusat mereka dari 3-4 Mei ke 8-9 Mei. Penangguhan ini berlaku selepas isu penipuan dalam pemilihan peringkat kawasan, yang menyebabkan parti melantik pemeriksa bebas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *