தயாரான பிரம்மோஸ் 2.0- இந்தியா எடுத்த துணிச்சல் முடிவு

- Muthu Kumar
- 03 Jun, 2025
பிரம்மோஸ் 2.0 ஏவுகணையை தயாரிப்பதற்கான பணிகளை இந்தியா - ரஷ்யா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியா சமீபத்தில் பாகிஸ்தான் உடன் நடந்த மோதலில் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது.இதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழிக்க இவை பயன்படுத்தப்பட்டதால் பாகிஸ்தான் வீழ்ந்துவிட்டது. சீனாவிலிருந்து கடனுக்கு வாங்கப்பட்ட அதன் சொந்த வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு கைகொடுக்கவில்லை.
பிரம்மோஸ் ஏவுகணையில் தற்போது எந்த குறையும் இல்லை. இந்த ஏவுகணை சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை கூட்டாக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் தொடங்கியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பாகிஸ்தானுடனான மோதலின் போது பிரம்மோஸ் ஏவுகணை திறம்பட பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பிரம்மோஸ் மாக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்க கூடியது(ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு). இது சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். இந்த வேகம் காரணமாக எதிரி நாடுகள் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம்.தாக்கப்பட்ட வேண்டிய இலக்கு நகர்ந்தாலும், பிரம்மோஸ் அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும். இது எதிரி கப்பல்கள், பதுங்கு குழிகள் மற்றும் இராணுவ தளங்கள் உட்பட தரை மற்றும் கடல் இலக்குகளை எளிதாக தாக்க முடியும்.
முதலில் இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. ஆனால் இப்போது, புதிய மாற்றங்கள் மூலம் 400 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியும். சில மேம்படுத்தப்பட்ட அப்டேட் மாடல்கள் 500 கிலோமீட்டருக்கு அப்பால் செல்லும் திறன் கொண்டது..
பிரம்மோஸ் ஏவுகணையை பின்வரும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
1. பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்பை 800 கி.மீ ஆக விரிவுபடுத்துவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது.
2. இதன் வேகத்தை அதிகரிக்கும் திட்டங்கள் உள்ளன.
3. ஏற்கனவே முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை எடையை குறைப்பது, தூரத்தை அதிகரிப்பது திட்டத்தில் உள்ளது.
4. சுகோய் போன்ற விமானத்தில் இருந்து ஏவும் வகையில் சிறிய வகைகளை உருவாக்குவது என்று பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை கூட்டாக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் தொடங்கியுள்ளன.
5. ஏவுகணையின் அடிப்படையில் பல மாற்றங்கள் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
6. தாழ்வாக சென்று தாக்கும் வகையில் மாற்றங்களை செய்ய உள்ளனர்.
7. அதிக திறன் கொண்ட புதிய மாடல் பிரம்மோஸ் ஏவுகணைக்கு ரஷ்யாவிற்கு இந்தியா முழு தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. புது தில்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையே ஆரம்ப பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்துள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நிலம் (மொபைல் லாஞ்சர்கள்)
ஏர் (Su-30MKI போன்ற போர் விமானங்கள்)
கடல் (போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்) இந்த மும்முனை தாக்குதல் காரணமாக.. போர் மோதலின் போது ஏவுகணை எங்கிருந்து வரும் என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *