கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்- பிரேமலதா பரபரப்பு பேச்சு!

- Muthu Kumar
- 01 Jul, 2025
ல்2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதற்கிடையெ பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சமீபத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜகவும் பங்கு வகிக்கும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், "கூட்டணி ஆட்சி என்பது வரவேற்கத்தக்கது. இது தே.மு.தி.க.வின் அடிப்படை நிலைப்பாடாகவே இருக்கிறது," எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தேமுதிக பல முறை பல தேர்தல்களில் தனியாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றை கொண்ட ஒரே கட்சி தேமுதிக தான். அதன் பிறகு கூட்டணிகள் அமைந்தது. மக்கள் நலனுக்காக கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன். கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் நாட்டுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது என்றார்.
அதிமுக தனிப் பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை மேற்கோள்காட்டி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது அவரின் கருத்து அவரின் கட்சி மேல் அவருக்கு உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு அது.. இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அவரிடமே கேளுங்கள்.
கூட்டணி ஆட்சி அமையும் என்பது அமித்ஷாவின் கருத்து.. அதே போல் தனிப் பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை.ஆனால் கடைசியில் எஜமானர்கள் மக்கள் தான். பொறுத்திருந்து பார்போம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *