MPக்களின் இடங்கள் காலியாகும்! - சபாநாயகர் எச்சரிக்கை!
- Shan Siva
- 07 Aug, 2024
ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 7: குறிப்பிட்ட காலத்திற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற சேவைகள் சட்டமான பிஎஸ்ஏ அமலுக்கு வந்தவுடன், விரைவில் தங்கள் அலவுன்ஸை இழக்க நேரிடுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PSA, MP-களின் வருகைத் தேவைகளை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது. சரியான காரணமின்றி ஆறு மாதங்களுக்கு அமர்வுகளைத் தவறவிடுபவர்கள் தங்கள் இடங்களையும் இழக்க நேரிடும் என்று அச்சட்டம் குறிப்பிடுகிறது.
இந்தக் காரணத்திற்காக இதுவரை எந்த எம்.பி.க்களும் தங்கள் இடங்களை இழக்கவில்லை என்றாலும், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து எம்.பி.க்களையும் தாம் எச்சரிப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
எல்லா உறுப்பினர்களும் எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்ட ஜொஹாரி, இருப்பினும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் இல்லாவிட்டால் வருகை கட்டாயம் என்று வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *