இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்!
- Muthu Kumar
- 01 Jun, 2024
இந்தியாவின் நியூ டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்பம் பதிவானதாக செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில்,நாக்பூரில் 55 டிகிரி செல்சியஸை தாண்டிவிட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
மே 30ஆம் தேதி புது தில்லியில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதில்லாமல், நாக்பூரில் இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வெப்பமானிகளில் வெப்ப அளவானது மிகக் கடுமையாகப் பதிவாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை பதிவாகாத வெப்ப அளவாக 56 டிகிரியைத் தொட்டுள்ளது.
டெல்லியில் வரலாறு காணாத வகையில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், நாக்பூரில் 24 ஏக்கரில் திறந்தவெளி விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட வெப்பமானியில் 56 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருக்கிறது. சோனேகான் பகுதியில் 54 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது.
ஏற்கனவே டெல்லியில் பதிவானதுதான் அதிகபட்ச வெப்பம் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது நாக்பூரில் 56 டிகிரி செல்சியஸ் என பதிவான வெப்பத்தால், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகியிருக்கிறதா அல்லது அதிக வெப்பநிலை காரணமாக, வெப்பமானிகளில் கோளாறு ஏற்பட்டிருக்குமா என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *