மகாவிஷ்ணு விவகாரத்தில் அரசையும், பள்ளி நிர்வாகத்தையும் சீறிப்பாய்ந்த சீமான்!

top-news
FREE WEBSITE AD

சென்னை அரசுப் பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகாவிஷ்ணு பேசிய மூடநம்பிக்கை விஷயங்களும், அறிவியலுக்கு புறம்பான விஷயங்களும் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது.இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணுவை   சென்னை விமானநிலையத்தில் வைத்து சென்னை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "எல்லா உயிரினங்களையும் பேரன்புக்கொண்டு நேசிப்பது தான் ஆன்மிகம். என்னை பெற்ற தாய் தந்தை இந்த உலகத்தை எனக்கு காட்டினார்கள். என் ஆசிரியர்கள் தான் இந்த உலகத்திற்கு என்னை காட்டினார்கள். ஆசிரியர்களை மனதிற்குள் வைத்து வணங்குவது வேறு. காலை கழுவது என்ன மாதிரியான செயல். இதுவெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் கோட்பாடுகள். இது எப்படி இங்கே உள்ளே வந்தது.

இதுவரை இல்லாத பிரச்சனை அரசுப் பள்ளியில் ஆன்மிக போதனை எப்படி வந்தது, யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டதா. இது வெளியே தெரிந்துவிட்டது. தெரியவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் தொடர்ந்துக்கொண்டுதானே இருந்திருக்கும்.

மகாவிஷ்ணுவை விமானநிலையத்திற்குள் சென்று ஒரு கொடுஞ்செயலை செய்த தீவிரவாதி போல் கைது செய்வதும் அதனை செய்தியாக்குவதும் ஏன். நீங்கள் வேறு செய்தியை மறைப்பதற்கு இதனை பெரிது செய்கிறீர்கள் அவ்வளவுதான் உண்மை. யாரோட அனுமதியும் இல்லாமல்தான் அவர் பள்ளிக்குள் வந்து பேசியிருப்பாரா?" என்றார் சீமான்.

தொடர்ந்து செய்தியாளர்கள், 'பள்ளி மேலாண்மைக் குழு எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்கள்' என்ற கேள்வியை முன்வைத்தபோது, "அந்த அளவிற்குதான் பள்ளி மேலாண்மையும், கல்வித்துறையும் இருக்கிறதா? தெரியாது என சொல்வதற்கு எதற்கு நிர்வாகம். இங்கிருந்து நான் யாருடன் பேசுகிறேன் என பதிவு செய்ய தெரிகிறது. மூன்று நான்கு வருடத்திற்கு முன்பு கைபேசியில் இருப்பதை எல்லாம் எடுத்து வெளியிட தெரிகிறது.இதை கண்டுபிடிக்க தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *