பி கேஆர் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை பிற்பகலில் தெரியவரும்!

- Muthu Kumar
- 21 May, 2025
ஜொகூர் பாரு,, மே 21-
பிகேஆர் கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் தெரிய வரும்.கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றம், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான வாக்களிப்பு, இதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும் என்று. அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.
கட்சியின் துணைத் தலைவர், நான்கு உதவித் தலைவர்கள் மற்றும் 20 மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராளர்கள் வாக்களிப்பார்கள் என்று. டாக்டர் ஃபுஸியா தெரிவித்தார்.
“இந்த எண்ணிக்கையில், 9,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் நேரடியாக வாக்களிப்பர். எஞ்சியவர்கள் இணையம் மூலம் வாக்களிப்பார்கள் என்று, ஜொகூர் பாருவில் நேற்று செவ்வாய்க்கிழமை பெர்னாமாவிடம்
செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறினார்.பொதுப் பேரவையில் நேரடியாக கலந்து கொள்ளும் பேராளர்கள், ஜொகூர் பாருவில் உள்ள பெர்ஜாயா வாட்டர்ஃபுரோண்ட் ஓட்டலிலும் பங்காபே மாநாட்டு மையத்திலும் நேரடியாக வாக்களிப்பார்கள் என்றும் டாக்டர் ஃபுஸியா தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக்கில் உள்ள பேராளர்கள் கூச்சிங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களில் நேரடியாக வாக்களிப்பார்கள்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பேசிய அவர், இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற வேட்பாளர் நியமனம் முடிவடைந்த பின்னர், ஆட்சேபம் தெரிவிப்பதற்காக இரண்டு நாட்கள் வழங்கப்பட்டபோது, போட்டியிடுபவர்களிடமிருந்து ஓர் ஆட்சேபம்கூட பெறப்படவில்லை என்றார்.
இந்நிலையில், 2025-2028 தவணைக்கான மத்திய அளவிலான பிகேஆர் தேர்தலில் போட்டியிட மொத்தம் 251 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததாக, பிகேஆர் மத்திய தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தப்பா இம்மாதம் 10ஆம் தேதி அறிவித்திருந்தார்.20 மத்திய நிர்வாகக் குழுப் பதவிகளுக்கு மொத்தம் 104 பேரும் இளைஞர் பிரிவுப் பதவிகளுக்கு 85 பேரும் மகளிர் பிரிவுப் பதவிகளுக்கு 62 பேரும் போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
கட்சியின் தலைவர் பதவிக்கு அதன் நடப்புத் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்த வேளையில், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.தற்போது மிகவும் 'சூடாக' பேசப்பட்டு வரும் துணைத் தலைவர் பதவிக்கு அதன் நடப்புத் துணைத் தலைவரும் பொருளாதாரத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியை எதிர்த்து, அக்கட்சியின் உதவித் தலைவரும் அன்வாரின் புதல்வியுமான நூருல் இஸ்ஸா அன்வார் களமிறங்கி இருக்கின்றார்.
கட்சியின் நான்கு உதவித் தலைவர்கள் பதவிகளுக்கு மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இயற்கை வளம் மற்றும் நீடித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சரும் நடப்பு உதவித் தலைவருமான நிக் நஸ்மி நிக் மாட், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறை அமைச்சர் சாங் லி காங், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு பிரிவுத் தலைவி பதவிக்கு அதன் நடப்புத் தலைவியும் கல்வி அமைச்சருமான ஃபட்லினா சிடேக்கை எதிர்த்து அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் போட்டியிடுகின்றார்.பிகேஆர் கட்சியின் பொதுப் பேரவை வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் ஜொகூர் பாருவில் நடைபெற விருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *