கனடாவில் தலைகீழாக விபத்துக்குள்ளான டெல்டா ஏர்லைன்ஸ்!

top-news
FREE WEBSITE AD

80 நபர்களுடன் கிளம்பிய டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் டொரன்டோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்படி விமானமானது தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியதாகவும் குறைந்தது 18 பேர் காயமடைந்ததாகவும், ஆனால் உயிரிழப்பேதும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவின் மிகப்பெரிய பெருநகரத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் 76 பயணிகளும் நான்கு பணியாளர்களுடன் தரையிறங்கிய டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவிக்கையில், 18 பேர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், ஒரு குழந்தை, 60 வயதுடைய ஒரு ஆண் மற்றும் 40 வயதுடைய ஒரு பெண் ஆகிய மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.லேசான காயங்களுடன் தப்பியவர்கள் உட்பட காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக, அப்பகுதி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவசர மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சமூக ஊடக பக்கங்களில் வெளியான காணொளிகளில், தலைகீழாக கவிழ்ந்த விமானத்தில் இருந்து மக்கள் தடுமாறித் தப்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கனடாவை பெரிய பனிப்புயல் ஒன்று தாக்கியது. டொரன்டோ நகரம் திங்கட்கிழமையும் பலத்த காற்று மற்றும் உறைய வைக்கும் வெப்பநிலையுடன் காணப்பட்டது.

புயல் காரணமாக வார இறுதி நாட்களில் ரத்து செய்யப்பட்ட விமானங்களை ஈடுசெய்ய விமான நிறுவனங்கள் விமானங்களைச் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, சுமார் 1,000 விமானங்களில் 130,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க இருப்பதாக டொரன்டோ விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

இதனிடையே, விமான விபத்தை அடுத்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 80 பேர்கள் பயணித்ததை பெடரல் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தி உள்ளார்.அத்துடன் நடந்த விபத்து குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *