முட்டைகளுக்கான மானியத்தை நீக்கினாலும் பெருமளவு பாதிப்பு இருக்காது!
- Shan Siva
- 10 Oct, 2024
கோலாலம்பூர், அக் 10: விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு கோழி முட்டைக்கான மானியத்தை நீக்க முடிவு செய்தால் விலை கடுமையாக உயரும் என்று அர்த்தம் இல்லை என சிலாங்கூர் கோழி வளர்ப்போர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மானியத்தை அகற்றுவது செயல்பாட்டுச் செலவுகளில் சில தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், அது குறைவாகவே இருக்கும் என்று அதன் துணைத் தலைவர் இட்ருஸ் ஜைனல் அபிடின் தெரிவித்தார்.
மானியங்கள் குறைக்கப்பட்டாலும் அல்லது முற்றிலுமாக நீக்கப்பட்டாலும், சந்தையில் முட்டை விலை சற்று உயரும் என்று இட்ருஸ் கூறினார்.
விலை அதிகரிப்பு ஒரு முட்டைக்கு 2 முதல் 3 சென் வரை மட்டுமே இருக்கும், ஏனெனில் நாங்கள் பெறும் மானியங்கள் குறிப்பிடத்தக்கவை அல்ல என்று FMT வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
கோழி முட்டைகள் விநியோகம் சீரானால், அவற்றுக்கான மானியத்தை நிறுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமட் சாபு நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *