பத்து பிரிங்கி கடற்கரையின் உணவுக் குடில்களில்,பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஆய்வு!

- Muthu Kumar
- 20 May, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மே 20-
பினாங்கு மாநிலத்தின் பத்து பிரிங்கி கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் உணவுக் குடில்களை ஆய்வு நடத்தும் பொருட்டு, மாநில உள்ளாட்சி, நகரப் பெருந்திட்டம் திட்டம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய் நேற்று முன்தினம் வருகையளித்து அவற்றின் உரிமையாளர்கள் எதிர்கொண்டு வரும் குறைகளைக் கேட்டறிந்தார்.
இங்கிருக்கும் சம்பந்தப்பட்ட 5 உணவுக் குடில்களின்தொழில் முனைவர்களிடம்
கலந்தாலோசித்த அவர், இவ்விடத்தில் உருவெடுக்கும் வணிகம் தொடர்பான பிரச்சினைகளை முதற்கட்டமாக சுற்றி வலம் வந்து, அவர்களோடு அளவளாவி, இங்குள்ள கடலோரச் சூழல்கள் அவர்களுக்கு எத்தகைய ரீதியில் வர்த்தக ஈடுபாட்டிற்கு பங்காற்றுகின்றன. என்பது உள்ளிட்ட ஐயங்களுக்கு தகுந்த முறையில் விளக்கங்களைப் பெற்றார்.
மியாமி கடற்கரை என்றழைக்கப்படும் இவ்விடத்தில் முன்னதாக கடைகளை அமைத்து வணிகம் புரிந்தவர்கள் யாவரும் கால ஓட்டத்தில் கடல் அரிப்பின் காரணமாக தத்தம் கடைகளை இழந்து விட்டதாலும் ஏனைய பலர் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டதாலும், இங்கு தற்போது ஐவர் மட்டுமே எனது குடில் (My Kiosk) என்ற பெயரில் சிறு வணிகர்களாக தொடர்ந்து தொழில் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் இருவர் மட்டுமே மாநில மாநகரசபையின் அங்கீகாரம் பெற்ற வணிகர்களாகவும் ஏனைய மூவர் தற்காலிக அனுமதியுடனும் இங்கு தொழில் புரிந்து வரும் நிலையில் இந்த வணிகர்களிடம் அளவளாவிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹிங் மூய் லாய், இங்கு சிறு
குடில்களாக வணிகர்களுக்கு வர்த்தக வாய்ப்பளித்த, மாநில வீடமைப்பு மற்றும் உள்நாட்டு அரசாங்கத் துறைக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
Hing Mui Lai melawat 5 penjaja di kawasan tepi pantai Pulau Pinang untuk mendengar masalah mereka. Hanya dua penjaja mempunyai lesen rasmi. Beliau menghargai peluang berniaga yang diberikan oleh kerajaan negeri dan jabatan perumahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *