அசாமைப் போல ஒருவர் வேண்டும்! கிடைப்பாரா? – அன்வார் கேள்வி!

- Muthu Kumar
- 24 May, 2025
ஜொகூர் பாரு, மே 24:
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் அசாம் பாக்கியின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முடிவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தற்காத்து பேசினார். இவ்விவகாரத்தில் தைரியமான ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று அவர் கூறினார்.
தேவைப்பட்டால் ஒரு புதிய தலைவரை நியமிக்க முடியும் என்றாலும், 2020 முதல் தனது பதவியில் இருக்கும் அசாமைப் போலவே மாற்றாக வருகிறவர் உறுதியைக் காட்டுவார் என்று தனக்கு நம்பிக்கை இல்லை என்று அன்வார் வலியுறுத்தினார்.
அவரது பதவி நீட்டிப்பு குறித்து நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் MACC 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதிலிருந்து, அவர்கள் பெரிய முதலைகளைப் பின்தொடரும் அளவுக்குத் துணிச்சலாக இருப்பது இதுவே முதல் முறை என்று அன்வார் இன்று இரவு PKR தேசிய மாநாட்டில் கூறினார்.
தேவைப்பட்டால் நாளை அவரை மாற்ற முடியும் - ஆனால் அடுத்த நபர் அவ்வளவு துணிச்சலானவராக இருப்பாரா என்று தமக்குத் தெரியவில்லை என அவர் கூறினார்.எனவே இன்னும் துணிச்சலான ஒருவரைக் கண்டுபிடிக்கும் வரை அவருக்கு இடம் கொடுப்போம். ஆனால் இதற்கிடையில், அவருக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று அன்வார் தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim mempertahankan keputusan melanjutkan tempoh perkhidmatan Ketua SPRM, Azam Baki. Beliau yakin sukar mencari pengganti yang berani seperti Azam, dan kerajaan memberi sokongan penuh sehingga pengganti lebih berani ditemui.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *