உயிரிழந்த சேமப்படை உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு உதவிநலன்கள்!

- Muthu Kumar
- 26 May, 2025
ஈப்போ, மே 26-
கடந்த மே 13ஆம் தேதி பேராக் தெலுக் இந்தானில், சேமப்படை உறுப்பினர்களை உட்படுத்தி நிகழ்ந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த 18 உறுப்பினர்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவிகள் கிடைத்துள்ளன.
அவர்களுக்கு மேலும் உதவும் பொருட்டு, அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் நேற்று நன்கொடை வழங்கினார்.சேமப்படை உறுப்பினர்களைப் பிரதிநிதித்து அவர்களின் மனைவிகளும், வாரிசுகளும் இந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டனர் வெற்றிகரமாக திரட்டப்பட்ட நன்கொடைகள் மூலம், விபத்தில் உயிரிழந்த சேமப்படை உறுப்பினர்களின் குடும்பத்தார் அல்லது வாரிசுகளுக்கு 46,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கம் வரை வழங்கப்பட்ட வேளையில், காயமடைந்தவர்களுக்கு 11,000 ரிங்கிட்டுக்கும் மேலாக வழங்கப்பட்டதாக ரசாருடின் கூறினார்.
“அதைத் தவிர்த்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்குத் தேசிய வீர்ர்கள் மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை நிதியிலிருந்து உதவி நிதியாக தலா 25,000 ரிங்கிட் மே 23ஆம் தேதி வழங்கப்பட்டிருந்ததையும் இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்," என்றார் அவர்.
நேற்று, ஈப்போ ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் உள்ள பேராக் போலீஸ் மூத்த அதிகாரிகள் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய போலீஸ் குடும்ப சங்கம் PERKEP தலைவரான ரஸாருடினின் துணைவியார் புவான் ஸ்ரீ டத்தோ சைனா ஒத்மானும் கலந்து கொண்டார்.
Seramai 18 anggota simpanan polis terlibat kemalangan di Teluk Intan menerima bantuan kewangan. Waris mangsa terima lebih RM46,000 manakala yang cedera terima lebih RM11,000. PERKEP dan dana kebangsaan turut menyumbang bantuan tambahan kepada keluarga terlibat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *