ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் இருப்பதை நாங்கள் விரும்பியதில்லை!

top-news
FREE WEBSITE AD

 ரஷ்ய ராணுவப் பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின், "இந்தியர்கள் எங்கள் ராணுவத்தில் இருப்பதை நாங்கள் எப்போதும் விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

இந்திய இளைஞர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதாகும் முகமது அப்சான், சூரத்தைச் சேர்ந்த 23 வயதாகும் ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா ஆகியோர், உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, உணவு விருந்தொன்றின்போது ரஷ்ய அதிபர் புதினிடம், 'ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதை நிறைவேற்ற புதினும் உறுதியளித்துள்ளார். 35 முதல் 40 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 10 பேர் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர்‌.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவப் பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின், "நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதியாக இந்தியர்கள் இருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. இது குறித்து ரஷ்ய அதிகாரிகளின் எந்த அறிவிப்பையும் மக்கள் பார்ப்பதில்லை. பெரும்பாலான இந்தியர்கள் பணம் சம்பாதிக்க விரும்புவதால் மட்டுமே இங்கே வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 50, 60 அல்லது 100-க்குள்ளாகவே இருப்பதால், அது எங்கள் ராணுவத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் வணிகக் காரணங்களுக்காக மட்டுமே இங்கே பணி செய்கிறார்கள், நாங்கள் அவர்களை வேலைக்குச் சேர்க்க விரும்பவில்லை.

ரஷ்ய ராணுவத்தில் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை செய்வதற்கு உரிய விசாக்கள் இல்லாததால், பெரும்பாலோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவிற்கு வந்துள்ளனர். உக்ரைனுடனான போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒப்பந்தக் கடமைகளின்படி, இழப்பீடு மற்றும் ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *