உலகின் சிறந்த கையெழுத்துக்கான விருது பெற்ற நேபாள மாணவி!

top-news
FREE WEBSITE AD


உலகிலேயே மிக நேர்த்தியான, அழகான கையெழுத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு மாணவியின் கையெழுத்து உள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த பிரகிருதி மல்லா (Prakriti Malla) என்ற மாணவியின் கையெழுத்துதான், உலகிலேயே சிறந்த கையெழுத்து என பாராட்டப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரத்தை பெற்ற பிரகிருதி மல்லாவிற்கு இப்போது வயது 16. இவர் தனது14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ​​அவர் எழுதிய அசைன்மென்ட் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த நோட்டில் எழுதப்பட்ட கையெழுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவளது அற்புதமான கையெழுத்தின் அழகைக் கண்டு மக்கள் வியந்தனர். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, அவரது கையெழுத்தில் உருவான கடிதத்தைப் பார்த்து பலரும் வியந்து போனார்கள். இவரது நோட்டில் இருந்த கையெழுத்தின் அழகைக் கண்டு மக்கள் வியந்து, பாராட்டு மழை பொழிந்தனர்.

இந்நிலையில், நேபாள மாணவி பிரகிருதி மல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51ஆவது ஆண்டு ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதினார். விழாவின்போது அவர் தனிப்பட்ட முறையில் கடிதத்தை தூதரகத்திற்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, நேபாளத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் பிரகிருதி மல்லாவைப் பற்றி ட்வீட் செய்தது. இதனையடுத்து தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில் உள்ள கடிதம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஸ்பிரிட் யூனியனைக் கொண்டாடும் வகையில் அவருக்கு உலகின் சிறந்த கையெழுத்து விருது வழங்கப்பட்டதாகக் கூறியது.

2022ஆம் ஆண்டில், நேபாளத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் பிரகிருதி மல்லாவைப் பற்றி ட்வீட் செய்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஸ்பிரிட் யூனியனைக் கொண்டாடும் வகையில் அவருக்கு உலகின் சிறந்த கையெழுத்துக்கான விருது வழங்கப்பட்டது. பிரகிருதி மல்லாவின் ஒவ்வொரு கடிதமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது கையெழுத்து உண்மையிலேயே வசீகரமாக இருக்கிறது, மேலும் அவரது கையெழுத்துத் திறமையுடன் ஒப்பிடும்போது கையெழுத்து என்ற இலக்கணம் கூட இவள் தான் என் முன்னோடி என்று சொல்லும் போல..


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *