நேபாளத்தின் முதல் கார் உற்பத்தி ஆலை திறப்பு கண்டது!

top-news
FREE WEBSITE AD

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் நேபாளத்தில் அதன் கார் அசம்பிள் தொழிற்சாலையை திறந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகங்களாக கொண்டு செல்லப்பட்டு இந்த தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்பட்ட முதல் ஹூண்டாய் கார் விற்பனைக்கு வெளிவந்துள்ளது.

இமயமலை தொடருக்கு அடிவாரத்தில் அமைந்திருப்பதினால் இயற்கை வளம் செழித்த நாடாக உள்ள போதிலும் பொருளாதாரத்தில் சற்று பின்தங்கி இருக்கும் ஒரு நாடு நேபாளம் ஆகும். எந்த அளவிற்கு என்றால் இந்த நாட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை எதுவும் இப்போது வரை இல்லை. தற்போது, ஹூண்டாய் திறந்திருக்கும் அசம்பிள் தொழிற்சாலை தான் நேபாளத்தின் முதல் கார் அசம்பிள் தொழிற்சாலை ஆகும்.

இந்த தொழிற்சாலையை நேபாளத்தின் லக்ஷ்மி குழுமத்துடன் இணைந்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது. நாட்டின் முதல் அசம்பிள் தொழிற்சாலையை நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்பா கமல் தஹால் சிறப்பு விருந்தினாராக கலந்துக் கொண்டு திறந்து  வைத்தார். அப்பொழுது நேபாளத்திற்கான தென்கொரிய தூதர் டே-யங் பார்க் உடன் இருந்தார்.

இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டு, இங்கு அசம்பிள் செய்யப்பட்ட முதல் ஹூண்டாய் காரான வென்யூ விற்பனைக்கு வெளிவந்துள்ளது. இந்த காரை கொடியசைத்து விற்பனைக்கு கொண்டுவந்த பின் பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான உனசூ கிம், "நேபாளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை ஆண்டுதோறும் 5,000 யூனிட்களை அசெம்பிள் செய்யும் திறனை கொண்டுள்ளது.

மேலும், ஹூண்டாய் வென்யூ ஆலையில் இருந்து வெளியேறும் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மாடலாக இது இருக்கும். இந்த சாதனைக்காக நேபாள மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் அதோடு மாண்புமிகு பிரதமர் திரு. புஷ்பா கமல் தஹால் மற்றும் நேபாள அரசின் அசைக்க முடியாத ஆதரவிற்கு மகிழ்ச்சி அடைகிறோம். நேபாள அரசாங்கத்திடம் இருந்து அதிக ஊக்கமளிக்கும் கொள்கைகள் மற்றும் ஊக்குவிப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று உனசூ கிம் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *