இந்தியாவில் ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள்?

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாத்ரஸ் மாவட்டம், முகல்கர்ஹி கிராமத்தில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், " உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக சொற்பொழிவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

அரசு காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து சிகிச்சைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்திய கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் மீட்புப்பணிக்கு தேவையான தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *