அனைத்துலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் பினாங்கு முதியோர் செயல்பாட்டு மையத்திற்கு வருகை!

- Muthu Kumar
- 17 May, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மே 17 -
அனைத்துலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்கும் புருணை மற்றும் சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதித்துவக் குழுவினர், நேற்று நன்மை பயக்கும் மற்றும் முன்தினம் இங்கு ஜெலுத்தோங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் முதியோர் செயல்பாட்டு மையத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டனர்.
சிங்கப்பூரின் பிரதிநிதி மருத்துவர் ரவீந்திர அபயசிங்கே தலைமையிலான அக்குழுவில், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மருத்துவர் தீபா கமகே, நோய் கட்டுப்பாட்டு நிபுணர் மருத்துவர் டெஃபி முயர்ஹெட் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிலரும், அந்த அமைப்பின் பொதுவுறவுத் துறை அதிகாரி, டாட்டியானா ஷெர்பகோவா மற்றும் தகவல் தொடர்புத் துறை அதிகாரி ரோகிணி ராஜதுரை ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.சம்பந்தப்பட்ட பிரதிநிதித்துவக் குழுவின் இந்த அதிகாரப்பூர்வ வருகை உற்சாகத் தோரணையுடன் எதிர்கொண்ட பினாங்கு மாநகர் மன்றப் பிரதிநிதிகள், இந்த மையத்தில் முதியோர் வசதிக்காக அமைக்கப்பட்டிருக்கும் பற்பல சிறப்பம்சங்கள் மற்றும் அதன் அன்றாடப் பணிகள் குறித்து
விளக்கமளிக்கப்பட்டன.
வெளியூர் விருந்தினர்கள் பற்றி தகவலறிந்த இங்கிருக்கும் மூத்த குடிமக்கள் உணர்ச்சிமிக்க நடன நிகழ்ச்சிகளை படைத்து அசத்தினர்.மையத்தின் முதியோர்களின் அனுசரணையை அறிந்து வெளியூர் பிரதிநிதிகளும் அவர்களோடு கை கோத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மையத்தின் பின்னணியை விளக்கவும், மூத்த குடிமக்களுக்கு அவர்களுக்காக நடத்தப்படும்
அன்றாட நடவடிக்கைகளும் நடவடிக்கைகளும்
எதிர்கால நலத் திட்டங்களின் முயற்சிகள் குறித்து விவரிக்கும் விளக்கக்காட்சி அமர்வும் உடன் நடத்தப்பட்டது.மூத்த குடிமக்கள் என்றென்றும் ஆரோக்கியமும்,திடமும் கொண்டு, சுறுசுறுப்பான மற்றும் மீள்தன்மை மிக்க சமூகமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக,இந்த மையத்தின் அணுகுமுறை அம்சங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
மையத்தின் இதர அம்சங்களை பார்வையிடுவதற்கு, வெளியூர் பிரதிநிதிகள் அதன் வளாகத்தை சுற்றிப் பார்க்கவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.சம்பந்தப்பட்ட தரப்பினரின் இந்தப் பயணம், மூத்தோர் எதிர்கொள்ளும் பற்பல தேவைகளை நிறைவேற்றுவதில் கையாளப்படும் உத்திகள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக அவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும் வித்தியாசம் மிகுந்த பிரத்தியேக அம்சங்கள் தொடர்பில், தகவல்களை சேகரிக்கும் நோக்கத்தின் பேரிலும் அமைந்திருக்கும் நிலையில், தங்களது சுகாதாரக் கொள்கைகளின் தாக்கத்தை நேரடியாக மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக இந்தப் புதிய அணுகுமுறை, ஒன்றியிருப்பதை உறுதிப்படுத்துவதே ஆகுமென்று தெரிவிக்கப்பட்டது.
Wakil WHO dari Brunei dan Singapura melawat pusat warga emas Jelutong, Pulau Pinang. Mereka meninjau kemudahan, aktiviti harian dan rancangan kebajikan masa depan, sambil berinteraksi dengan warga emas melalui tarian dan aktiviti bersama.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *