எந்தப் பிரச்னையானாலும் முகைதீன் பின்னால் பெர்சாத்து நிற்கும்! ஹம்சா சூளுரை
- Shan Siva
- 24 Aug, 2024
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 24: 15வது பொதுத் தேர்தலுக்குப் (GE15) பிறகு ஏன் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கியிருக்கும் பெர்சாத்துக் கட்சித் தலைவர் முகைதீன் யாசினை, தொடர்ந்து ஆதரிக்கப் போவதாக பெர்சாத்து தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முகைதீன் மற்றும் அவர்களின் போராட்டத்தின் பின்னால் கட்சி உறுதியாக இருப்பதாக ஓர் அறிக்கையில், பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் கூறினார்.
உண்மையைப் பேசுவோரை, சோதனைகளை எதிர்கொள்பவர்களை இறைவன் பாதுகாப்பான் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், நவம்பர் 21, 2022 அன்று பெரிக்காத்தான் மற்றும் பிற கட்சிகளின் எம்.பி.க்கள், மொத்தம் 114 உறுப்பினர்கள், முகைதினை பிரதமராக நியமிக்க ஆதரித்தது உண்மைதான் என்று ஹம்சா கூறினார்.
ஒரு கூடுதல் எம்.பி. பின்னர் இந்த ஆதரவை 115 ஆக உயர்த்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது மறுக்க முடியாத உண்மை என்றும், மேலும் முகைதீன் இந்த உண்மையை முன்வைத்தார் என்றும் ஹம்சா கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *