ஓபன் ஏஐயால் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையே மனக்கசப்பு!

top-news
FREE WEBSITE AD

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளை எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில்தான் மஸ்கிற்கு அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.

இப்படி நெருக்கமாக இருந்த டிரம்ப் எலான் மஸ்க் இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார்.உலகம் முழுக்க மக்கள் இடையே இவி கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. டெஸ்லா இவி கார் விநியோகம் அதிகரித்துள்ள நிலையில் டிரம்ப் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இது எலான் மஸ்க்கிற்கு கிட்டத்தட்ட எதிரான முடிவாக பார்க்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஏஐ உலகில் அமெரிக்கா 500 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தார். அதன்படி ஜப்பான் SoftBank மற்றும் ChatGPTஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இணைந்து இந்த பணிகளை செய்யும். அமெரிக்காவில் Stargate ஏஐயை உருவாக்க இந்த நிதி பயன்படுத்தப்படும். உலகில் நம்பர் 1 ஏஐ நுட்பமாக இது இருக்கும் என்று டிரம்ப் அறிவித்தார்.

இதைத்தான் எலான் மஸ்க் எதிர்த்து உள்ளார். அந்த அளவிற்கு முதலீடு செய்ய பணம் இல்லை என்று கூறி டிரம்ப் முடிவை நேரடியாக எதிர்த்து உள்ளார். ஆனால் எலான் மஸ்க்கின் இந்த செயலை ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் எதிர்த்து உள்ளார்.

அதன்படி எப்போதும் உங்க கம்பெனி மட்டும் முக்கியமல்ல, அமெரிக்காவின் நன்மையும் முக்கியம். நீங்கள் பொது பொறுப்பில் உள்ளீர்கள். அதனால் எல்லோரின் நன்மைக்காக யோசியுங்கள் என்று கூறி உள்ளார். ஒருகாலத்தில் ஓபன் ஏஐ உருவாக்க நிதி கொடுத்ததே மஸ்க்தான்.அதன்பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதை விட்டு எலான் மஸ்க் வெளியேறினார். இப்போது அதே ஓபன் ஏஐயால் மஸ்க் டிரம்ப்பை சாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *