ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவர போகும் அதிரடியான கட்டுப்பாடுகள்!

top-news
FREE WEBSITE AD

வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) புதிய பணப் பரிமாற்ற விதிகளை (New Money Transfer Rules) கொண்டு வந்துள்ளது.

இனிமேல் அவ்வளவு எளிதாக ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பிவிட முடியாது. இந்த புதிய விதிகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

இந்திய மத்திய அரசின் கீழ் செயல்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது, இந்த புதிய பணப் பரிமாற்ற விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதில் கேஒய்சி விதிகள் (KYC Rules) வங்கி கணக்காளர்களுக்கு வருத்தம் அளிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், பாதுகாப்புக்குத்தான் விதிகள் வருகின்றன. ஆகவே, பணப் பரிவர்த்தனைகளின் போது கூடுதல் கேஒய்சி விவரங்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

என்னென்ன விதிகள் அமலுக்கு வரும்? இந்த புதிய பணப் பரிமாற்ற விதிகளின்படி வங்கி கணக்கு,கைத்தொலைபேசி எண் மற்றும் வங்கியின் கிளை மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்படும். ஆகவே, வங்கி கணக்கு துவங்கும் பொழுது கேஒய்சி விவரங்களை பதிவு செய்வதில் கூடுதல் கட்டுப்பாடுகள் இனிமேல் விதிக்கப்படும்.

அதேபோல கைத்தொலைபேசி எண் மற்றும் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் - ஓவிடி (Officially Valid Document- OVD) ஆவணங்களை கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் போகலாம். ஆகவே, வங்கியில் கேட்கப்படும் கேஒய்சி ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.

இதுபோக கூடுதல் காரணி அங்கீகாரம் - ஏஎப்ஏ (Additional Factor of Authentication - AFA) கொண்டு வரப்பட இருக்கிறது. அதாவது, பணப் பரிமாற்றத்தின் போது ஓடிபி (OTP) அங்கீகாரம் கேட்கப்படும். இதில், இப்போது கூடுதலாக அங்கீகாரம் சேர்க்கப்பட இருக்கிறது. ஆதார் வெரிபிகேஷன் போன்று ஏதாவது ஒரு கூடுதல் அங்கீகாரம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.

ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் என்இஎப்டி (NEFT) பரிவர்த்தனைகளின்போது, வங்கி விவரங்கள் மட்டுமல்லாமல், பணம் அனுப்புபவர் விவரங்களையும் கொடுக்க வேண்டும். இந்த புதிய விதிகள் உள்நாட்டு பணப் பரிமாற்றம் - டிஎம்டி (Domestic Money Transfer - DMT) செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படுகிறது. ஆகவே, இந்தியாவின் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு அமலாக இருக்கிறது.

ஆகவே, ஒட்டுமொத்தமாக கேஒய்சி விதிகளில் மாற்றங்கள் வர இருக்கின்றன. இப்போதே வங்கி வாடிக்கையாளர்கள் ங்களது கணக்குகளில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள். வங்கிகளில் கொடுக்கப்பட்ட கை தொலைபேசி எண் மட்டுமல்லாமல், ஆதார், பான் கார்டு போன்றவற்றில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பரையும் தயாராக வைத்து கொள்ளுங்கள்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *