பதிலடி எங்களுக்கு ஏற்ற நேரத்திலும், இடத்திலும்,திட்டப்படி இருக்கும்- இஸ்ரேல்!

top-news
FREE WEBSITE AD

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலை ஒரே இரவில் நடுங்க வைத்துள்ளது ஈரான் தாக்குதல்.

எங்கள் எல்லைக்குள் வர முடியாது.. உங்களை தொடாமலே பேஜர் தாக்குதல் நடத்துவோம்.. ஆனால் எங்களை தாக்குவதை பற்றி உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மார் தட்டிக்கொண்டு இருந்த இஸ்ரேலை லெபனான், ஈரானில் இருந்து ஈரான் படைகளும், ஹிஸ்புல்லா படைகளும் ஒரே நேரத்தில் தாக்கி திணறடித்து உள்ளன.

ஈரான் கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக.. நாங்கள் பதிலடி கொடுப்போம். அந்த பதிலடி எங்களுக்கு ஏற்ற நேரத்தில் இருக்கும். எங்களுக்கு ஏற்ற இடத்தில் இருக்கும். எங்களின் திட்டப்படி இருக்கும் என்று இஸ்ரேல் சபதம் எடுத்துள்ளது.

இதனால் இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. முக்கியமாக இஸ்ரேல் இரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஒன்று இஸ்ரேல் ஈரானின் அணு உலைகளை குறி வைக்கலாம். அல்லது ஈரான் மீது நேரடியாக இஸ்ரேல் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம்.

ஏனென்றால் இஸ்ரேலுக்கு இந்த தாக்குதல் மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார இழப்புகளை விட இஸ்ரேல் இமேஜ் உடைவதை விரும்பாது. அடிவாங்கி விட்டோம் என்பதை இஸ்ரேல் இனம் ஏற்காது. இதற்கு எப்போதுமே இஸ்ரேல் பெரிய பதிலடியையே திருப்பி கொடுத்து வழக்கம். அந்த வகையில்தான் இஸ்ரேல் ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

இதுவரை 2000 க்கும் அதிகமான ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இதில் இஸ்ரேல் கடுமையான சேதங்களை சந்தித்து உள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது

அந்நாட்டு அதிபர் - பிரதமர் - ராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான உயர்மட்ட கூட்டத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பயங்கர பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது என்ன பதிலடி என்று தெரியவில்லை. இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக இது அணு ஆயுத போராக உருவெடுக்கும் அபாயங்களாக உள்ளன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *