பிரதமர் பதிவை நீக்கியதற்காக Meta மன்னிப்புக் கேட்க வேண்டும்! அரசு கோரிக்கை
- Shan Siva
- 05 Aug, 2024
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 5: மறைந்த ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே
குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவுகளை
நீக்கியதற்காக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று அரசாங்கம் கோரியுள்ளது.
பிரதமர் அலுவலகம்
(PMO) தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi
Fadzil மற்றும் மலேசிய தொடர்பு
மற்றும் பல்லூடக ஆணையமான MCMC) தலைவர் Salim
Fateh Din இன்று Meta பிரதிநிதிகளை சந்தித்த போது இந்த கோரிக்கை
முன்வைக்கப்பட்டது.
மெட்டா எடுத்த
நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் வேண்டும் என்றும், மெட்டாவிடம் இருந்து பகிரங்க மன்னிப்பு உட்பட பல விஷயங்களை
பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31 அன்று ஈரானின் தெஹ்ரானில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு அன்வார் அவருக்கு அஞ்சலி
செலுத்திய பதிவு மெட்டாவால் அகற்றப்பட்டது.
ஹனியேவை அன்பான
நண்பர் என்றும், தனது மக்களுக்காக துணிச்சலாக
வாதாடக்கூடியவர் என்றும் அன்வார் அந்தப் பதிவில் வர்ணித்திருந்தார். இதனையடுத்து மெட்டா
அந்தப் பதிவை முடக்கியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *