பள்ளி விடுதியில் கடும் தீ! பிரார்த்தனையால் தப்பித்த 90 மாணவர்கள்!

- Shan Siva
- 29 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 29: நேற்றிரவு SMK Tinggi Setapak மாணவர் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய சுமார் 90 மாணவர்கள், சுராவில் நடைபெற்ற இஸ்யாக் பிரார்த்தனையால் பாதிப்பிலிருந்து அதிரஷ்டவசமாகத் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த
நேரத்தில், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் பள்ளி
சூராவில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 8.43 மணிக்கு தனது துறைக்கு இந்த சம்பவம் குறித்து
அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மூத்த செயல்பாட்டுத் தளபதி ஜபாரி தாஜுதீன்
கூறினார்.
இதனை அடுத்து அவசர மருத்துவ சேவைகள் (EMRS) குழுவுடன்
சேர்ந்து, ஸ்தாப்பாக், செந்தூல், ஜாலான் ஹாங் துவா
மற்றும் தெற்கு கோம்பாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த நான்கு
இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
அந்தக் குழுவினர்
வந்தபோது, பள்ளியில் உள்ள
மாணவர் விடுதி கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.
40 பணியாளர்கள் உதவியுடன்
உடனடி தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இரவு 9.40 மணியளவில் தீ
வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்று அவர்
கூறினார்.
தீ விபத்துக்கான
காரணத்தையும் சேதத்தின் அளவையும் அடையாளம் காண JBPM தடயவியல் பிரிவு விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *