கடுமையான தண்டனைகள், குற்றங்களின் அளவை குறைக்க உதவும்-மு க ஸ்டாலின்!

top-news
FREE WEBSITE AD

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை கொண்ட புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

2025-ம் ஆண்டுக்கான குற்றவியல் சட்ட திருத்தம்சார்ந்த மசோதா, பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- 12 வயதுக்குள் உள்ள சிறுமிகளிடம் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். 18 வயதுக்குள் உள்ள சிறுமிகளிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுங்காவல் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

அதிகாரம் மிக்க நபர்கள் அல்லது பணியாளர்களால் பெண்களுக்கு எதிராக குற்றம் நிகழ்ந்தால், குறைந்தது 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீனில் வெளியே வரும் வாய்ப்பு இல்லை.

மேலும், மசோதா தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் தமிழக அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய கடுமையான தண்டனைகள், குற்றங்களின் அளவை குறைக்க உதவும்," என்று உறுதிப்படுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *