ஆரம்பிச்சாச்சு புதிய கமிஷ்னர் அருணின் DARE எனும் அதிரடி ஆப்ரேஷன்!

top-news
FREE WEBSITE AD

சென்னையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். ரவுடிகளுக்கு ஆலோசனை சொல்லி அடக்கி வைப்பது, தேவை என்றால் சுட்டு பிடிப்பது, மீறிப்போனால் என்கவுண்டர் செய்வதற்கு கூட சென்னை போலீசார் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படியே சமீபத்தில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சில என்கவுண்டர்கள் கூட நடந்தன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் கூட சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

சென்னையில் கமிஷ்னர் அருண் மூலம் ஆபரேஷன் டேர்.அதாவது DARE - துணிச்சல் என்ற பெயரில் புதிய போலீஸ் ஆபரேஷன் தொடங்கப்பட்டு உள்ளது. இது என்ன ஆபரேஷன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 12 துணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையின் புதிய கமிஷனர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் தகவல்களை அருண் எடுத்துள்ளார். அவர் சென்னை பெருநகரம் முழுவதும் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கே செல்ல முடிவு எடுத்துள்ளனர். அங்கே நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு சென்னை செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது. சென்னையில் ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் பிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

ரவுடி சேதுபதி மீது கொலை, கொள்ளை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. அவர் அங்கே இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் அங்கே சென்று அவரை பிடிக்க முயன்ற போது,சேதுபதி தப்பி ஓட முயன்றதால் அவரை சுட்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . இரவில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சத்தம் காரணமாக மக்கள் கும்பலாக வெளியே வந்து பார்த்தனர்.

ஏற்கனவே ரவுடிசத்தை விட்டு வர விரும்பாத ரவுடிகள் மீது கடுமையான ஆக்சன் எடுக்கப்படும் என்று அருண் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக முக்கியமாக சென்னையில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *