ஹக்கா முழக்கம் மூலம் நியூசிலாந்து இளம் பெண் எம்.பி உட்பட 3 எம்.பிக்கள் இடைநீக்கம்!

top-news
FREE WEBSITE AD

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது.இதற்கு எதிராக மாவோரி இன எம்.பி ஹனா, மாவோரி இன மக்களின் பாரம்பர்ய பாடலை பாடியவாரே அந்த மசோதாவின் நகலை கிழித்தார். அவையில் தன் எதிர்ப்பை இவ்வாறாக காட்டினார். அவருடன் மற்ற மாவோரி இன எம்.பி க்களும் பாடலை பாடி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வைதாங்கி ஒப்பந்தம்: இது நியூசிலாந்தின் வரலாறு , அதன் அரசியலமைப்பு மற்றும் அதன் தேசிய புராணங்களுக்கு மைய முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாகும். நியூசிலாந்தின் "வைதாங்கி ஒப்பந்தம்" (Waitangi Treaty) என்பது 1840 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மக்களுக்கிடையேயான ஒரு முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம், நியூசிலாந்து மாவோரி மக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் பரஸ்பர ஒப்பந்தமாக கையெழுத்தாகி, நாட்டின் உரிமைகள், காப்புறுதி மற்றும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதை நோக்கி அமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அதிகார பரிமாற்றம், பன்முக உரிமைகள், சட்ட சமாதானம்.

வைதாங்கி ஒப்பந்த மாற்றத்திற்கு மாவோரி இன எம். பி க்கள் எதிராக குரல் கொடுத்தனர்.
அவர்களின் பழங்குடியின பாடலும், ஆவேச நடனமும், மசோதாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படையாக எதிரொலித்ததும் நியூசிலாந்து மட்டுமன்றி உலகத்தையே உற்று பார்க்க வைத்தது. இந்த நிகழ்வுக்கு பின் நாடளுமன்றத்தின் சபாநாயகர் மாவோரி எம்.பி. க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், நியூசிலாந்து அரசு அமைத்த ஆணையம் , நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் எழுப்பிய மூன்று உறுப்பினர்களையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
அதில், தெ பாத்தி மவோரி எனும் மவோரி பழங்குடியின கட்சியின் டெப்பி ஞாரெவா பாக்கெர் மற்றும் ராவிரி வைட்டிட்டி ஆகியோரை 21 நாள்களுக்கும் இளம் உறுப்பினர் ஹனாவை 7 நாள்களுக்கும் இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *