சபா தேர்தலில் அதிர்ச்சியை ஏற்படுத்துவோம் -பாஸ் கட்சி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 21 -

சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் "அதிர்ச்சியை" ஏற்படுத்த முடியும் என்று சபா மாநில பாஸ் கூறுகிறது. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறமுடியாத பாஸ் கட்சி அச்சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை சிதறடித்து "குட்டையை குழப்பும் ஒரு கட்சியாக மட்டுமே இருக்க முடியும் என்று. அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இம்முறை நடைபெற விருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில், கூடுதலான வியூகங்களுடன் மற்றும் நேர்த்தியான முறையில் மக்களின் விருப்பங்களை அறிந்து வைத்திருக்கும் தலைவர்களை தேர்தல் களத்தில் இறக்கி பாஸ் போட்டியிடும் என்று, சபா மாநில பாஸ் செயலாளர் சஹார் அப்துல் மஜிட் கூறியுள்ளார். “குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியை பெறக் கூடிய தலைவர்களை பாஸ் கட்சி களத்தில் இறக்கும், அதனால்தான் குறிப்பிட்ட தொகுதிகளில் பாஸ் கட்சியினால் வெற்றிபெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

"அரசியல் விசித்திரமானது என்பதுடன், எதுவும் சாத்தியமாகலாம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் அனைத்து தகவல்களையும் தங்களின் விரல் நுனியில் வைத்துள்ளனர் என்று எஃப்எம்டியிடம் சஹார் தெரிவித்தார்.யாருடனும் கூட்டு வைத்தாலும் வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு கட்சியாக பாஸ் இருக்கிறது என்பதும் பாஸ் கட்சியின் பங்கேற்பை சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது என்பதும் நிரூபிக்கப்பட்டிருப்பதாக சஹார் கூறினார்.

சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சியின் முதல் வெற்றி மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், காரணம். அம்மாநிலத்தின் அரசியல் அரங்கில் அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இந்நிலையில், சபா சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலாவது பாஸ் கட்சியினால் அவ்வளவு சுலபத்தில் வெற்றி பெற்றுவிட முடியாது என்று கூறியுள்ள அரசியல் ஆய்வாளர் ஒருவர், அக்கட்சியினால் அத்தேர்தலில் வாக்குகளை சிதறடித்து
"குட்டையை குழப்பும் ஒரு கட்சியாக மட்டுமே இருக்க முடியும் என்றார்.

சபாவில் உள்ள மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் மத்தியில் ஆதரவைப்பெற பாஸ் தொடங்கி இருக்கும் அரசியல் சூழலை ஒப்புக் கொண்ட சபா மலேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லீ குவோக் தியூங்,அதன் வெற்றிக்கு அவர்களின் ஆதரவு மட்டும் போதாது என்றும் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் (பாஸ்) போட்டியை ஏற்படுத்தலாம். வெற்றி பெற முடியும் என்பது சாத்தியமற்றது. அதனால் வாக்குகளை மட்டுமே அதனால் சிதறடிக்க முடியும்" என்று லீ கூறியுள்ளார்.சபாவில் மொத்தம் 73 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் குறைந்தது ஆறு தொகுதிகளிலாவது பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தின் கீழ் போட்டியிடப் போவதாக பாஸ் இதற்கு முன்னர் கூறியிருந்தது.

PAS Sabah yakin mampu menang dalam PRN Sabah dengan strategi baharu, namun penganalisis politik berpandangan PAS hanya akan memecah undi tanpa peluang menang. Walaupun mendapat sokongan sebahagian pengundi Islam, ia belum cukup menjamin kemenangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *