இந்த நிலத்தில் ஓர் அங்குலத்தைக் கூட சமரசம் செய்யமாட்டோம்! - அன்வார்
- Shan Siva
- 30 Jul, 2024
புத்ராஜெயா, ஜூலை
30: நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒற்றுமை அரசாங்கம் சமரசம் செய்து
கொள்ளாது என்றும் சபா உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது
என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.
சபா மீது பிலிப்பைன்ஸின்
உரிமைகோரல் தொடர்பாகப் பேசிய அவர் மலேசிய அரசாங்கம் இந்த நிலத்தில்
ஒரு அங்குலத்தை கூட சமரசம் செய்யாது என்று தெரிவித்தார்.
இருந்தபோதிலும், மலேசியாவுக்கும்
பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு இன்னும் நன்றாக இருப்பதாகவும், ஜனாதிபதி
பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருடன் தாம் இன்னும் நல்ல மற்றும் நெருக்கமான உறவைப்
பேணுவதாகவும் அன்வார் கூறினார்.
எனவே, இந்த உறவைப் பாதுகாப்பை பராமரிக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஆசிய நாடுகள் நிலையான, வளமான
பிராந்தியத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அன்வார் அழைப்பு
விடுத்துள்ளார்
புதுமைகளின் மூலம் நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்
சில ஆண்டுகளுக்கு முன்பு
சபாவில் நடந்தது போன்ற (ஊடுருவல் மற்றும்) தாக்குதல்கள் எதிர்பாராத சூழ்நிலையில்
நடந்தது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என்பதை நமது பாதுகாப்புப் படையினர்
புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் இன்று தேசிய பாதுகாப்பு மாத கொண்டாட்டத்தை
தொடங்கி வைத்துப் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு முன், சமூக
ஊடகங்களில் ஆதாரமற்ற, தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்
மற்றும் சபா மாநிலத்தின் இறையாண்மையை மறுக்கும் வீடியோ ஒன்று வைரலானது.
நேற்று, வெளியுறவு
அமைச்சு ஓர் அறிக்கையில், சபா எப்போதும் மலேசியாவின்
ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற அரசாங்கத்தின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும்
வலியுறுத்தியது.
செப்டம்பர் 16, 1963
இல் மலேசியா கூட்டமைப்பு உருவானதில் இருந்து சபா ஐ.நா (UN) மற்றும் சர்வதேச சமூகத்தால் மலேசியாவின் ஒரு பகுதியாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில்
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து அமைச்சகம் ஒரு
முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *