ஏப்ரல் 24 SPM தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப்ரல் 17: 2024 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3,337 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு மொத்தம் 402,956 பேர் பதிவு செய்துள்ளதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் அன்று காலை 10 மணி முதல் தங்கள் பள்ளிகளில் முடிவுகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் தேர்வர்களுக்கு, முடிவுகள் தபால் மூலம் அனுப்பப்படும், அல்லது அவர்கள் தேர்வு எழுத பதிவு செய்த மாநில கல்வித் துறையைத் தொடர்பு கொண்டு முடிவுகளைப் பெறலாம் என்று அது கூறியது.

ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6 மணி வரை myresultspm.moe.gov.my என்ற இணையதளத்தில் தங்கள் முடிவுகளை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

அதே காலகட்டத்தில் “SPM” என டைப் செய்து IC எண் மற்றும் தேர்வுக்கான பதிவு எண்ணை SMS மூலம் 15888 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் சரிபார்ப்புகளைச் செய்யலாம்!

Pada 17 April, Kementerian Pendidikan mengumumkan keputusan SPM 2024 akan diumumkan pada 24 April. Seramai 402,956 calon menduduki peperiksaan di 3,337 pusat. Keputusan boleh diperoleh melalui sekolah, pos, atau online di myresultspm.moe.gov.my.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *