ஆசிரியர்கள் நேர்மையாக இருங்கள்! மாணவர்களைத் திட்ட கூடாது! FADHLINA நினைவூட்டல்!

- Sangeetha K Loganathan
- 26 May, 2025
மே 26,
பள்ளி மாணவர்களை வழிநடத்துவதற்கானக் கல்வி அமைச்சு கொண்டு வந்துள்ள ஆசிரியர்களான நெறிமுறையான Standard Guru Malaysia (SGM) 2.0 வழிகாட்டலை ஆசிரியர்கள் நேர்மையாகப் பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek நினைவூட்டினார். முன்னதாகப் பள்ளி சிற்றுண்டிச் சாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவரைத் திட்டும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து இது தொடர்பாகக் கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட காணொலி சமூகவலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் அந்த காணொலியைப்த் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek கேட்டுக்கொண்டார். அரசு ஊழியர்களான ஆசிரியர்கள் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பலமுறை கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளதாகவும் நேர்மையாகவும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் Fadhlina Sidek வலியுறுத்தினார்.
Menteri Pendidikan Fadhlina Sidek mengingatkan guru agar mematuhi Standard Guru Malaysia (SGM) 2.0 secara jujur dan tidak memarahi pelajar sesuka hati. Kes video guru menengking pelajar sedang disiasat oleh jawatankuasa tatatertib kementerian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *