PKR துணைத் தலைவராக 9,803 வாக்குகள் பெற்று நூருல் இஸா வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, மே 23: பிகேஆர் துணைத் தலைவராக நூருல் இஸா அன்வார் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நூருல் இஸா 9,803 வாக்குகளையும், ரஃபிசி 3,866 வாக்குகளைப் பெற்றனர்.

மத்திய தேர்தல் குழு (ஜேபிபி) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா,  நேற்று இரவு பெர்சாடா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிகேஆர் 2024/2025 தேசிய மாநாட்டில் அதிகாரப்பூர்வ முடிவை அறிவித்தார்.

அந்த வகையில் தலைவர்: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

துணைத் தலைவர்: நூருல் இஸா அன்வார் தேர்வு செய்யப்பட்ட வேளையில், உதவித் தலைவர்களாக டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி (7,955)வாக்குகளுடனும்,

டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் (5,889) வாக்குகளுடனும்,

-டத்தோஸ்ரீ ஆர். ரமணன் (5,895) வாக்குகளுடனும்

சாங் லிஹ் காங் (5,757) வாக்குகளுடனும் வெற்றிபெற்றனர்.

பிகேஆர் மகளிர் தலைவராக: ஃபட்லினா சிடெக் (2,890) வாக்குகளைப் பெற்றார்.

Nurul Izzah Anwar diumumkan rasmi sebagai Timbalan Presiden PKR dengan 9,803 undi, mengalahkan Rafizi Ramli. Anwar Ibrahim kekal Presiden parti. Amirudin Shari, Aminuddin Harun, R. Ramanan dan Chang Lih Kang dipilih sebagai Timbalan Presiden.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *