இஸ்ரேல் துருக்கி மீது போர் தொடுத்தால்- மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும்!

top-news
FREE WEBSITE AD

இஸ்ரேஸ் ஈரானுடன் போர் நடத்தி வருகிறது, அடுத்ததாக இஸ்ரேல் துருக்கி மீது தாக்குதலை நடத்தலாம் என பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பின் மேல் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை நாடான லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தங்களது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் நாடு ஆதரவு கொடுத்து வருகிறது.

இதனால் இஸ்ரேல் ஈரான் நாடுகள் தங்களுக்குள் எதிர்ப்பு ராணுவ தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரான் மற்றும் சீன ராணுவங்கள் கூட்டு பயிற்சி செய்து வருகிறது. மேலும் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது.

காசா மீது போர் தொடங்கிய நாள் முதல் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது துருக்கி. அந்தவகையில் இஸ்ரேஸ் உடனான நட்பு உறவை முறித்துக் கொண்டது துருக்கி. இதனை அந்த நாட்டு அதிபர் ரெசேப் தயிப் எர்டோகன் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து இஸ்ரேல் நாட்டின் அனைத்து நாடுகளும் நட்பினை துண்டித்துள்ளார்கள்.

இதனால் இஸ்ரேஸ் அடுத்த கட்டமாக துருக்கி மீது பழிவாங்கும் தாக்குதலை நடத்தலாம் என துருக்கி பாதுகாப்பு துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளது. இது தொடர்பாக துருக்கி நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் யாரச் குலர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதில் இஸ்ரேல் துருக்கி மீது போர் தொடுக்கும் என்ற அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு போர் தொடுத்தால் இது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் எனக் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *