கமேனி இந்தியாவை முஸ்லீம்கள் துன்புறுத்தும் இடமாகப் பெயரிட்டுள்ளதன் பின்னனி!

top-news
FREE WEBSITE AD

ஈரானின் ஆன்மீகத் தலைவரான கமேனி இந்தியாவை முஸ்லீம்கள் துன்புறுத்தும் இடமாகப் பெயரிட்டுள்ளார். இப்படி அழைப்பது முதல் முறை அல்ல என்றாலும் தனது கருத்தைத் தெரிவிக்க அவரைத் தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மார்ச் 2020 ஆண்டில் வடகிழக்கு டெல்லி கலவரம் விமர்சனத்தைத் தூண்டிய பின்னர் கமேனி இக்கலவரத்தை "முஸ்லீம்களின் படுகொலை" என்று அழைத்தார், மேலும் தீவிரவாத இந்துக்கள் மற்றும் அவர்களது கட்சிகள் இந்தியாவை இஸ்லாமிய உலகில் இருந்து தனிமைப்படுத்துவதை தடுக்க இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தார். .

1989 ஆம் ஆண்டு முதல் ஈரானின் ஆன்மீகத் தலைவராக இருந்து வரும் கமேனி 'உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு வருந்துகின்றன. இஸ்லாமிய உலகில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்க இந்திய அரசு தீவிரவாத இந்துக்கள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் முஸ்லிம்கள் படுகொலையை நிறுத்த வேண்டும்.' என #IndianMuslimslnDanger என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு இருந்தார்.ஆகஸ்ட் 2019 ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் நிலைமை குறித்து கமேனி கவலை தெரிவித்தார்.

காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் நிலைமை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது ஆனால் காஷ்மீரின் உள்ள மக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு நியாயமான கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் இந்த பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கொடுமைப்படுத்துவதை தடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கமேனி பதிவு செய்திருந்தார். அவரது கருத்தை இந்தியா நிராகரித்தது.

ஈரான் கடைசியாக 2002ம் ஆண்டில் குஜராத் கலவரத்திற்குப் பிறகும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகும் இந்தியாவை விமர்சித்தது.1992, 2002 மற்றும் 2020 ஆஆண்டுகள் இந்திய முஸ்லிம்களைப் பற்றி கமேனி பேசிய தருணங்கள் என்றாலும், அவர் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்பியுள்ளார், கடைசியாக ஆகஸ்ட் 2019 ல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முன் கமேனி 2017 இல் காஷ்மீர் பற்றி குறிப்பிட்டார் "முஸ்லீம் உலகம் ஏமன், பஹ்ரைன் மற்றும் காஷ்மீர் மக்களை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் மற்றும் அவர்களை தாக்கிய ஒடுக்குமுறையாளர்களையும் கொடுங்கோலர்களையும் நிராகரிக்க வேண்டும் என்று கமேனி கூறினார்.

கடைசியாக ஜம்மு காஷ்மீர் வன்முறை ஈரானிய தலைவர்களால் வெளிப்படையாகக் கொண்டுவரப்பட்டது 2010 இல் ஈரானிய உச்ச தலைவர் மட்டுமல்ல நாட்டின் வெளியுறவு அமைச்சகமும் காஷ்மீர் பற்றி கேள்விகளை எழுப்பியது.

2010 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், காஷ்மீரில் போராட்டத்தை முஸ்லிம் சமூகம் ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை கமேனி எழுப்பினார், மேலும் காஸா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அதே வகையிலும் வைத்தார்.

இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிய கவலைகளின் பின்னணியில் 2010ம் ஆண்டில் காஷ்மீர் குறித்த ஈரானின் பேச்சு அதிகரித்தது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சர்வதேச அணுசக்தி வாக்கெடுப்பில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *