எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு? ஜம்ரிக்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் பதிலடி

- Shan Siva
- 19 May, 2025
ZAMRI VINOTH எனும் அந்த விஷவாதி கூறியிருப்பதாக சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அந்தச் செய்தி.
இந்துக்கள் எந்த
நாட்டிலெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பல்வேறு பிரச்சனைகளை இந்துக்கள் கட்டவிழ்த்து
விடுவதாக ZAMRI VINOTH அதில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்துக்கள் எல்லா
மதத்தைச் சேர்ந்தவர்களிடமும் பிரச்னையை உருவாக்குகிறார்கள் என வெளிப்படையாக
இந்துக்கள் மீது ZAMRI VINOTH வன்மத்தைக் கொட்டியுள்ளார்.
ZAMRIயின் இந்தப் பேச்சைத்
தாம் வன்மையாகக் கண்டிப்பதாக மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின்
தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் எச்சரித்துள்ளார்.
இந்த ZAMRI மீது 1000க்கும்
மேற்பட்ட புகார்கள் காவல் துறைக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
ஒருவேளை முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, முறையான கவனிப்பு
நடந்திருந்தால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற
3 ஆர் விவகாரங்களை அவர் எழுப்பாமல் இருந்திருக்கலாம். அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டதன்
விளைவு, இப்போது இந்த நாட்டின் குடிமக்களான இந்துக்களின்
மனதை இந்த அளவுக்குக் கொந்தளிக்க வைத்திருக்கிறார்.
இந்துக்கள் என்றால்
பிரச்னை, இந்துக்கள் மாட்டுச்சாணம் தின்பவர்கள் என்று பச்சையாய்
ஒரு செய்தியை சமூக ஊடகங்களில் அவரால் பகிர முடிகிறது என்றால், இது யார் கொடுக்கும் தைரியம்? என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
உண்மையில் ZAMRI 3 ஆர் விவகாரம் தொட்டுதான் பேசுகிறார் என்பது அரசுக்குத் தெரியும். ஆட்சியாளர்களுக்கும்
தெரியும். இருந்தும் அவர் இதுபோன்ற இழிவான கருத்துகளைத் தொடர்ந்து பேசுவதற்கு சுதந்திரம்
இருக்கிறது என்றால், இதை என்னவென்று சொல்வது? என அவர் தமது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
பல இனங்கள் கூட இந்தியர்கள்
ஒத்துப்போவதில்லை என்று அவர் சொல்கிறார். ஆனால், அவர் ஆதரிக்கும்
பாகிஸ்தானில்
அவர்களுக்குளேயே சண்டை
இருக்கிறது. அது அவருக்குத் தெரியும். பங்ளாதேஷ் சண்டை போட்டு பிரிந்தது, இப்போது பலுசிஸ்தான் சண்டை போடுகிறது. இப்படி பிரச்னைகளின்
மொத்த உருவமாய், உலகம் வெறுக்கும் ஒரு நாடாய்
பாகிஸ்தான் இருக்கிறது. தீவிரவாத செயலை 40 வருசமா நாங்கதான் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும்
செய்திருக்கிறோம்ன் என்று உண்மையை ஒத்துகொண்டிருக்கிறது பாகிஸ்தான். இதனை உலக நாடுகள்
அறியும். வேண்டுமானால் அங்கு போய் குரைக்கச் சொல்லுங்கள் இவரை.
அங்கு போய் சமாதானம் பேசச் சொல்லுங்கள். இதில் இந்துக்கள் என்றால் பிரச்னை என்று உளறுகிறார்.
நம் இந்தியர்கள் இதுபோன்ற
அர்த்தமற்றப் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.
வானத்தை நோக்கிக்
கல் எறிந்தால், வானத்தில் கீறல் விழுவதில்லை.
சூரியனைப் பார்த்து
நாய் குரைப்பதால் சூரியனுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை, நாய்க்குத்ததான் கேடு. எனவெ அதுகள் அதுக்குத் தெரிந்ததைக் குரைக்கட்டும்.
அதற்கான உரிய பதிலடி, தண்டனை நிச்சயம் அதுகளுக்குக்
கிடைக்கும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கடுமையாகச் சாடினார்.
எதைச் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படி வாழ வேண்டும்
எனும் பண்பாட்டை ஆய்ந்து அறிந்து இந்த உலகத்திறகுச் சொன்ன முதல் மாந்தர் இனம் தமிழ்
இனம்தான். அந்த இனத்தின் வழிபாட்டு மதமாக இந்து மதம் விளங்குகிறது. அப்பேற்பட்ட பின்னணி கொண்ட எங்களை மாட்டுச்சாணம் தின்பவர்கள்
என்று எள்ளி நகையாடியிருக்கிறார் இந்தக் கோமாளி.
மாட்டுச்சாணத்தின்
மகிமை தெரியாமல் பேசியிருக்கிறது அந்த மட மூளை.
துரு நீரை அகற்றும்
திருநீர் மாட்டுச்சாணத்தில் உருவாக்கப்படுவதுதான்... அதை நாம் பிரசாதமாக சில நேரங்களில்
வாயில் இட்டுக்கொள்வதுண்டு. ஆமாம் நாங்கள் மாட்டுச் சாணத்தைத் தின்பவர்கள்தான்.
எப்படி பன்றி, பூனை, காக்கா எனப் பல மிருகங்களின்
உதவியுடன் உருவாக்கப்படும் மருந்துகளை நீ வியாதிக்காகச் சாப்பிடுகிறாயோ.... அதே போல்
நாங்கள் அதை மருந்தாகப் பயன்படுத்துகிறோம் எனவே... நீ சொல்வதால் எங்களுக்கு எந்தப்
பாதிப்பும் இல்லை.
இப்போதும் தமிழக கிராமங்களில்
அதிகாலையில் மாட்டுச்சாணத்தை முற்றத்தில் தெளிக்கிறார்கள். வீட்டுத் தரைகளில் பூசுகிறார்கள்.
காரணம் அது கிருமி நாசினி என்பதால்.
எனவே, நீ நினைக்கிற மாதிரி மாட்டுச்சாணம் ஒன்றும் இழிவானது அல்ல.
உன்னைப் போன்றவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. எனவே, இந்துக்களை எப்போதும் இழிவுபடுத்த வேண்டும், அப்போதுதான் இந்த நாட்டில் நமது பிழைப்பு ஓடும் என்பதற்காக
இப்படி எதையாவது பேசிக்கொண்டிருக்கும் உன் வாய்க்கு, ஒரு நாள் பூட்டு
போடப்படும். அதற்குரிய தண்டனையை நிச்சயம் அனுபவிப்பாய் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
தான் வந்த பாதையை மறந்து மதம் மாறி, தன்னை ஒரு முஸ்லீம் என நம்ப வைக்க இப்படி பிழைப்பு நடத்தும் இவரை, மரத்துக்கு மரம் தாவும் ஒரு குரங்கு என்றால் அது மிகையில்லை. குரங்குகளுக்கு
கூட கொஞ்சம் புத்தி உண்டு. ஆனால், இது போன்ற ஜென்மங்களுக்கு அதைவிடவும்
அறிவு குறைவுதான் எனவே குரங்கை நாம் கொச்சைப்படுத்த வேண்டாம் என ஓம்ஸ் பா.தியாகராஜன்
சாடினார்.
இது போன்ற விஷக் கருத்துகளைத் தொடர்ந்து தூவிக்கொண்டிருக்கும் ஜம்ரி மீது அரசு
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ அதை நாம் அவர்களிடம் விட்டுவிடுவோம். நாம் அதைப்
பொருட்படுத்த வேண்டாம். காலம் இத்தகைய நபர்களைக் காலில் போட்டு மிதிக்கும் என ஓம்ஸ்
பா.தியாகராஜன் கூறினார்.
கூடவே,
‘சாணம்
விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா
திருநீறு
உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே
நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே’
என்ற பாடல் வரிகளையும் சுட்டிக்காட்டி, உனக்கு என்ன வரலாற? என ஜம்ரியை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *