முட்டை விலை 10 காசுகள் உயரும்!

- Shan Siva
- 03 May, 2025
கோலாலம்பூர், மே 3: அரசாங்க மானியங்கள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முட்டை விலைகள் சுமார் 10 காசு உயரக்கூடும் என்றும், ஆனால் இந்த அதிகரிப்பு விநியோகத்தை உறுதிப்படுத்தி தொழில்துறையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மைடின் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின் தெரிவித்துள்ளார்.
இந்த சிறிய
அதிகரிப்பு ஆரோக்கியமான, சந்தை சார்ந்த அமைப்புக்கு மாற்றத்தின் ஒரு
பகுதியாகும், இது இறுதியில் பற்றாக்குறையைக் குறைத்து, மிகவும் மீள்தன்மை கொண்ட முட்டைத் தொழிலை உருவாக்கும் என்று FMT இணய ஊடகத்திடம் அமீர் கூறினார்.
அரசாங்கம் நேற்று
ஒரு முட்டைக்கு 10 காசில் இருந்து 5 காசாக மானியங்களைக் குறைத்தது. மேலும் அது முழுமையாக நீக்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி விலை உச்சவரம்பு முடிவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
முட்டை விலைகள்
தற்போது ஒரு முட்டைக்கு கிரேடு ஏ 42 காசுகளாகவும், கிரேடு பி 40 காசுகளாகவும் கிரேடு சி 38 காசுகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
முட்டைக்கு 10 காசுகள் மானியம் வழங்குவது RM100 மில்லியன் செலவை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டது.
Pengasas Mydin menjangkakan harga telur mungkin naik 10 sen selepas subsidi dan kawalan harga dimansuhkan. Kenaikan ini dijangka bantu kestabilan bekalan dan kukuhkan industri telur. Subsidi dijadual tamat sepenuhnya pada 1 Ogos.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *