ஆசிரியர்கள் இடமாற்றம் 2 ஆண்டுகளாகக் குறைப்பு! – கல்வி அமைச்சர் Fadhlina!

top-news

மே 16,

ஆசிரியர்கள் புதிய பணியிடங்களுக்கான மாற்றம் குறித்து பல்வேறு சீர்திருத்தங்களைக் கல்வி அமைச்சு கொண்டு வருவதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தின் போது சம்மந்தப்பட்ட ஆசிரியர் 2 ஆண்டுகள் பணி செய்திருந்தால் போதுமானது என்று முன்னதாக 3 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆசிரியர்களின் பணியிட மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அது 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளதையும் Fadhlina Sidek சுட்டிக்காட்டினார்.

இன்று கூச்சிங்கில் நடைபெற்ற ஆசிரியர் நன்னாள் பொது நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை Fadhlina Sidek அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க நாடு முழுவதும் இந்த ஆண்டு 1,470 உதவி ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 2 உதவி ஆசிரியர்களும் நியமிக்கப்படவிருப்பதாகவும் Fadhlina Sidek தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களுக்கான MH GOM வலைத்தளத்தின் மூலமாக ஆசிரியர்களுக்கு 20% விமான டிக்கெட்டுகள் கழிவு வழங்கவிருப்பதாகவும் கல்வி அமைச்சர் Fadhlina Sidek உறுதியளித்தார்.

Menteri Pendidikan Fadhlina Sidek umum tempoh minimum perkhidmatan untuk permohonan pertukaran guru dikurangkan daripada 3 tahun kepada 2 tahun. Seramai 1,470 pembantu guru akan dilantik dan guru juga akan nikmati diskaun tiket penerbangan melalui laman MH GOM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *