PETROL விலை இனிமேல் உயராது! அன்வார் உறுதி!

top-news

மே 24,

PETROL RON 95 எரிவாயுவின் விலை இனி உயராது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார். அதே வேளையில் RON 95 எரிவாயு மலேசியர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே இருக்கும் என்பதில் மடானி அரசு உறுதியாக இருப்பதாகவும் RON 95 எரிவாயுவைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாகப் பல்வேறும் முரண்பட்ட கருத்துகள் எதிர்கொண்டாலும் பரவாயில்லை. மலேசிய மக்களுக்கான வாழ்வாதாரத்தில் எரிவாயும் முக்கிய பங்களிப்பதால் RON 95 எரிவாயு விலையை மடானி அரசு இனியும் உயர்த்தாது என்பதில் உறுதியாக இருப்பதாக அன்வார் தெரிவித்தார்,

RON 95 எரிவாயு விலைக்காக அரசு மானியம் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய சில காரணங்கள் இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மீண்டும் மக்களுக்கான மானியத்தை வழங்கும் அளவிற்கு மடானி அரசு செயல்பட்டிருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார். RON 95 எரிவாயுவில் அரசு வழங்கும் மானியத்தால் வெளிநாட்டினர்கள் RM 3 முதல் RM 4 பில்லியன் வரையில் பயன் பெறுவதாக அன்வார் சுட்டிக்காட்டினார். இது மிக பெரிய தொகை. இந்த தொகை வெளிநாட்டினர்களுக்குப் பயனளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது மலேசிய மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் மடானி அரசு செயல்படும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார்.

Perdana Menteri Anwar Ibrahim memberi jaminan harga petrol RON 95 tidak akan dinaikkan. Beliau menegaskan RON 95 hanya untuk rakyat Malaysia, dan tindakan tegas akan diambil terhadap warga asing yang menyalahgunakannya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *