பாகிஸ்தானில் அதிக முதலீடுகளை அமெரிக்கா செய்யவேண்டிய அவசியம் என்ன?
- Muthu Kumar
- 26 Jul, 2024
அமெரிக்காவின் முதலீடுகள் தான் பாகிஸ்தானின் எதிர்காலம் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்ட் லு எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அப்போது பாகிஸ்தானில் இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்து பல்வேறு உறுப்பினர்களும் கேள்விகளை முன் வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த டொனால்டு லு, சீனாவை பொறுத்தவரை அனைத்து நாடுகளிலும் தங்களுடைய ராணுவ தளம் இருக்க வேண்டும் என கருதுகிறது. மேலும் ஒவ்வொரு நாட்டிலும் சீனாவின் நிதியுதவியின் பெயரில் செய்யப்படும் திட்டங்கள் அனைத்திற்கும் அதிகபட்ச வட்டி விதிக்கப்படுகிறது.மேலும் வெளிநாடுகளில் சீனா எந்த ஒரு திட்டப் பணிகளை மேற்கொண்டாலும் சீனாவை சேர்ந்த பணியாளர்களை மட்டுமே அதற்கு பயன்படுத்துகிறது என கூறினார். அந்த நாடுகளில் இருப்பவர்களுக்கு தொழில் நுட்பங்களையோ பணிகளையோ சீனா கற்றுத் தருவது கிடையாது.
மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து சீனா முக்கியமான தனிமங்களை குறிப்பாக காப்பர் உள்ளிட்டவற்றை எடுத்து மறைமுகமாக சீனாவிற்கு கொண்டு செல்கிறது என கூறினார்.சீனாவை பொறுத்தவரை பாகிஸ்தானில் முதலீடுகள் செய்திருந்தாலும் அந்த நாட்டு மக்களின் நலனுக்காக சீனா ஒரு பைசா கூட செலவு செய்வது கிடையாது என சாடினார். பாகிஸ்தானில் சீனா 26 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய ஒரு தொகையாகும். ஆனால் இதன் மூலம் சீனாவுக்கு எந்த ஒரு லாபமும் கிடைப்பதாக தெரியவில்லை எனவே பாகிஸ்தான் மீதான கவனத்தை சீனா கைவிட்டு வருகிறது என தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தானின் சூழலை கருத்தில் கொண்டு ஒரு வாய்ப்பாக கருதி அமெரிக்கா அங்கு முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும் என கூறினார். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ,பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும் , பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கூடுதல் உதவி செய்வது அவசியம் என்றார். மேற்கொண்டு அவர்கள் சீனாவை சார்ந்திருப்பதை தவிர்க்கவும் அமெரிக்கா அவர்களுக்கு நிதி உதவி செய்தாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எந்த ஒரு உதவியை செய்தாலும் அதனை இந்தியா உற்றுநோக்க வேண்டியுள்ளது. அது பொருளாதார ரீதியான உதவியாக இருந்தாலும் அது இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *