பலுசிஸ்தான் தனி நாடு என அறிவித்ததன் பின்னனி என்ன?

- Muthu Kumar
- 15 May, 2025
சமூக வலைதளங்களில், பலூச் மக்கள் தங்கள் நாட்டின் தனி நாட்டுக் குடிமை வரைபடத்தையும், பலுசிஸ்தான் கொடி அசைக்கும் காணொளிகளையும் பகிர்ந்து உள்ளனர்.
மே 9 ஆம் தேதி, பலூச் உரிமை போராளியும், செயற்பாட்டாளருமான மீர் யார் பலூச், "பாகிஸ்தான் என்ற பயங்கரவாத நாடு விரைவில் வீழ்ச்சி அடைய உள்ளது. நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம். டெல்லியில் பலுசிஸ்தான் தூதரகம் மற்றும் அலுவலகம் அமைக்க இந்தியா அனுமதிக்க வேண்டும்," என X-தளத்தில் பதிவு செய்தார்.
அதேபோல், ஐ.நா. இந்த சுதந்திரத்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும், உலக நாடுகளை அழைத்து கூட்டம் கூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் நம் நாட்டின் நாணயம், பாஸ்போர்ட் அச்சடிக்க பில்லியன் கணக்கில் நிதி விடுவிக்கப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
அடுத்த நாள், அவர் "இந்தியா – பலூச் நட்பு" குறித்த பேனர்களுடன் நிற்கும் உள்ளூர் மக்களின் புகைப்படங்களை பகிர்ந்தார். மேலும், "பலுசிஸ்தானை சேர்ந்த மக்கள் முழுமையாக பாரத மக்களுக்கு ஆதரவு அளிக்க வருகின்றனர். சீனா பாகிஸ்தானுக்கு உதவுகிறது, ஆனால் பலுசிஸ்தான் மக்கள் இந்திய ஆதரவு நிலையுடன் இருப்பார்கள்," எனக் கூறினார்.
அவர், "மோடி ஜி, நீங்கள் தனியாக இல்லை; 60 மில்லியன் பலூச் தேசியவாதிகள் உங்களுடன் உள்ளனர்," என்றும் X-இல் பதிவிட்டார்.மே 14, 2025 அன்று, மீர் யார் பலூச் வெளியிட்ட மற்றொரு பதிவில், "இந்திய அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்க வேண்டும் என்ற முடிவுக்கு பலுசிஸ்தான் முழுமையான ஆதரவு அளிக்கிறது. பாகிஸ்தான் மீண்டும் 93,000 ராணுவம் பிடிபட்டதுபோல வெட்கக்கேடான தோல்வி சந்திக்க விரும்பவில்லை என்றால், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்த காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்," எனக் கூறினார்.
மேலும், “இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை தோற்கடிக்கக்கூடிய திறன் கொண்டது. பாகிஸ்தான் கவனம் செலுத்தவில்லை என்றால், படுதோல்விக்கு பொறுப்பு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளே,” என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *