நூருல் இஸா கூறுவது உண்மைக்குப் புறம்பானது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 23: நூருல் இஸஸா அன்வார் துணைத் தலைவர் பதவியை யாரும் தற்காக்காமல் போகலாம் என்ற அச்சம் காரணமாகவே அப்பதவிக்குப் போட்டியிட முடிவு செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, பிகேஆர் நடப்புத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அவரைச் சாடியுள்ளார்.

நூருல் இஸா உண்மையில் பிகேஆர் துணைத் தலைவர் பதவியை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று கவலைப்பட்டிருந்தால், சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயிலை களத்தில் இறக்கிவிடச் சொல்லியிருக்கலாம் என்று ரஃபிஸி தெரிவித்தார்.

அல்லது நூருல் இஸா 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மீண்டும் அரசியலில் தம்மை ஈடுபடச் செய்ய சமாதானப்படுத்துவதற்கா அடிக்கடி தொடர்பு கொண்டதைப் போலவே மீண்டும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஒருபோதும் வரைவு செய்யவில்லை என்றும் அதேபோல், பிகேஆர் இரண்டாம் நிலைப் பதவியைப் பாதுகாக்கத் திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.

கட்சியின் தலைமைத்துவ வெற்றிடத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நுழைந்ததாக நூருல் இஸா கூறியது உண்மைக்குப் புறம்பானது என்று ரஃபிஸி சாடினார்.

கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டபடி, எனது பதவியைப் பாதுகாப்பேன் என்று நான் முன்பே அறிவித்திருந்தேன் என்று ரஃபிஸி சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *