தொடரும் வடகொரியாவின் பலூன் அட்டூழியத்தால் விமான நிலையம் பாதிப்பு!

top-news
FREE WEBSITE AD

வடகொரியாவின் அட்டூழியத்தால் தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பலூன் ஒன்று பயணிகளுக்கான இரண்டாவது முனையத்தில் தரையிறங்கியுள்ளது. மூன்று பலூன்கள் ஓடுதளத்தில் தரையிறங்கியுள்ளது.

இதன் காரணமாகவே விமான நிலையம் புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. கடந்த மே மாத இறுதியில் இருந்தே தென் கொரியாவிற்குள் குப்பைகள் நிரப்பிய பலூன்களை வடகொரியா பறக்கவிட்டு வருகிறது. பல நூறு பலூன்கள் தென் கொரியாவின் பல பகுதிகளில் தரையிறங்கியுள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை சியோல் விமான நிலைய எல்லையிலும் அதைச் சுற்றியும் பல பலூன்கள் காணப்பட்டன. வடகொரியாவால் சியோல் விமான நிலையம் மூடப்படுவது இது முதல் முறையல்ல என்றே அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

வடகொரிய எல்லையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இன்சியான் சர்வதேச விமான நிலையம். புதன்கிழமை அதிகாலை 1.46 முதல் 4.44 வரை உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் விமான நிலையம் சேவையை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் அந்த நேரம் குறைவாகவே இருக்கும். ஆனால் 8 சரக்கு விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் ஷாங்காயில் இருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று சீனாவின் யாண்டாய்க்கு திருப்பி விடப்பட்டது. மட்டுமின்றி, தரையிறங்க காத்திருந்த பல விமானங்கள் தாமதமாகியுள்ளது.

புறப்படும் விமானங்களும் பல மணி நேர தாமதத்திற்கு பின்னர் வெளியேறியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமை இடையே சுமார் 100 பலூன்கள் தரையிறங்கியதாக தென் கொரியாவின் ராணுவம்  தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் தலைநகர் சியோல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தரையிறங்கியதாகவும், பெரும்பாலான பலூன்களில் காகிதக் குப்பைகளே காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *