திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை!

top-news
FREE WEBSITE AD

சென்னையில் நேற்று எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து 'எல்லோருக்கமான தலைவர் அம்பேத்கர்' நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார்.

இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "கருத்தியல் சிந்தனை கொண்ட ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். தமிழ்நாடு ஊழலை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அம்பேத்கர் கொள்கையை பேசுபவர்கள் ஏன் அவரை மேடையேற்றவில்லை.மன்னர் பரம்பரையை உருவாக்க இனி தமிழகம் ஒருபோதும், இடம் தராது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இன்று மன்னர் பரம்பரையை ஒழிப்பதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் நமக்கு தேவைப்படுகிறது. 2026 தேர்தலுக்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்.

1 கோடியே 40 லட்சம் பேர் தலித்கள். ஆனால், ஆட்சியிலும் பங்கு அதிகாரித்திலும் பங்கு என்று கேட்டால் தவறு என்கிறார்கள். வெறும் 25 சதவீதம் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் பெரியக் கட்சி என்கிறீர்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வேண்டும். அதில் தலித்களுக்கு பங்கு வேண்டும். 69% சமூக நீதியை உருவாக்கிவிட்டோம். ஆனால் அரசியலில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால் விடவே மாட்டார்கள். மன்னர் ஆட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னர் ஆட்சியை கேள்விக்கேட்டால் சங்கி என கூறிவிடுவார்கள்" என்று பேசினார்.

இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாக தான் முடிவெடுத்தேன்.

உலகம் முழுவதும் தற்பொழுது மக்களாட்சி தான் நடைபெறுகிறது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பல காலங்கள் ஆகிறது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *