3 நாட்கள் விடுமுறையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பான் அரசு!

top-news
FREE WEBSITE AD

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற கொள்கைகள் பின்பற்றப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி தன்னை புதுப்பித்துக் கொண்ட ஜப்பான் நாட்டின் டோக்கியோ அரசும் இந்த முடிவை எடுத்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைப்பதாக அமைந்திருக்கிறது.

டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே இது குறித்து கூறுகையில்,ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் விடுமுறையுடன் சுருக்கப்பட்ட வேலை நாட்களை தேர்வு செய்யலாம்.இந்த புதுமையான அணுகுமுறை வேலை-வாழ்க்கை சமநிலையை அதிகரித்து, திருமணமானவர்கள் மத்தியில் குழந்தை பெற ஊக்குவிக்கும் நோக்கம் அதிகரிக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஜப்பானின் கருவுறுதல் விகிதம் மக்கள் தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 விகிதத்தை விட குறைவாக 1.2 குழந்தைகள் என அதிர்ச்சியூட்டும் அளவுக்கு குறைந்துள்ளது.இதை சமாளிக்க ஜப்பான் அரசு நாடு தழுவிய அளவில் மக்களை குடும்பத்தை விரிவாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் , இதனிடையில் தான் டோக்கியோ அரசு வாரம் 3 நாள் விடுமுறையை அறிமுகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

தொடக்கப் பள்ளியில் ஊழியர்களின் குழந்தைகள் படித்தால், பெற்றோர்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் ஏற்பாடு செய்துக்கொடுக்க ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கட்டளையிட்டு உள்ளது. இந்த நடவடிக்கை பெற்றோருக்கு தங்கள் வேலை நேரத்தை குறைத்து, அதே நேரத்தில் விகித அடிப்படையில் சம்பளத்தை பராமரிக்க அனுமதிக்கிறது.

ஜப்பான் செயல்முறை பல நாடுகளுக்கு பாடமாக இருக்கப்போகிறது.கடந்த ஆண்டு ஜப்பானில் வெறும் 727,277 குழந்தைகள் பிறந்ததாக அந்நாட்டு சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.இந்த 3 நாள் விடுமுறை 2025 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *