காட்டுப்பன்றி என நினைத்து தன் சக நண்பரையே சுட்டுக் கொன்ற கொடூரம்!

- Shan Siva
- 28 May, 2025
கோலாலம்பூர், மே 28: சரவாக்கில் காட்டுப்பன்றி என நினைத்து தன் சக நண்பரையே வேட்டையாட வந்த நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரவாக், மெலுகு, சுங்கை டோர் காட்டுப் பகுதியில் நேற்று மதியம் வேட்டையாடச்
சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், நண்பரால் தலையில் சுடப்பட்டதில் சம்பந்தப்பட்ட
உள்ளூர்வாசிஉயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின்
வேட்டைத் தோழரான 46 வயதுடைய சந்தேக
நபர், காட்டுப்பன்றி என்று
நினைத்து பாதிக்கப்பட்டவரை நோக்கிச் சுட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில்
கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த
சிறிது நேரத்திலேயே வந்த மருத்துவப் பணியாளர்களால், 40 வயது பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகத்ன்
தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரிடம்
அந்தப் பகுதியில் வேட்டையாடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள செல்லுபடியாகும் துப்பாக்கி
உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது என்று ஸ்ரீ அமான் மாவட்ட காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர்
டென்னிஸ் புன்யம் தெரிவித்தார்.
சம்பவத்தில்
பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304A இன் கீழ் விசாரணைகளில் உதவுவதற்காக சந்தேக நபர் மே 30 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் உரிமம் பெறாத துப்பாக்கியை வைத்திருந்ததற்காக துப்பாக்கிச் சட்டம் 1960 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki di Sarawak tertembak mati rakannya ketika memburu, menyangka mangsa sebagai babi hutan. Mangsa maut di tempat kejadian, manakala suspek ditahan. Polis mendapati suspek tiada lesen senjata sah dan menjalankan siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *