குரங்கின் மீது பெயிண்ட் தெளித்த கொடூரம்!

- Shan Siva
- 24 May, 2025
கோலாலம்பூர், மே 24: சுங்கை பூலோவின் டெசா மோசிஸில் கூண்டில் உதவியற்ற நிலையில் சிக்கிய குரங்கின் மீது நீல வண்ணப்பூச்சு தெளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற அதிர்ச்சியூட்டும் இக்காட்சி பல விமர்சனங்களை எதிர்நோக்கி வருகிறது.
Persatuan Haiwan Terbiar Malaysia (SAFM) இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளது, இது ஓர் கொடூரமான விலங்கு துஷ்பிரயேகம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த கொடூரமான
வீடியோவை அந்த அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், தகவல் தெரிந்த எவரும் உடனடியாக காவல்துறை
மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறைக்கு (பெர்ஹிலிடன்) தகவல்
தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதனால் இத்தீயச் செயலுக்குப் பொறுப்பானவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுமையான செயல்
மட்டுமல்ல - இது ஒரு கிரிமினல் குற்றம்.
வனவிலங்கு
பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716) இன் பிரிவு 86 இன் கீழ், குற்றவாளிகள் RM5,000 முதல் RM50,000 வரை அபராதம், ஒரு வருடம் வரை
சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படுவார்கள் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது!
ஒரு நாகரிக சமூகத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை என்றும், நீதி கிடைக்கும் வரை இவ்வழக்கை உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியது!
Seekor monyet di Sungai Buloh disembur cat biru dalam sangkar, menyebabkan kecaman hebat. Persatuan Haiwan Terbiar Malaysia (SAFM) mengecam perbuatan kejam ini dan menuntut tindakan undang-undang mengikut Akta Perlindungan Hidupan Liar 2010.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *