தற்கொலை இயந்திரத்தில் தன் உயிரை தானே மாய்த்து கொண்ட முதல் பெண்!

top-news
FREE WEBSITE AD


உலகிலேயே முதல் முறையாக தற்கொலை செய்வதற்கான கேப்சூல் போன்ற 'சார்கோ' எனும் பெயரிலான இயந்திரத்தை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த தி லாஸ்ட் ரிசார்ட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரத்துக்குள் ஒருவர் படுத்துக் கொண்டால் போதும் சில நிமிடங்களில் வலியில்லாமல் உயிர் பிரிந்து விடும்.

சீல் செய்யப்பட்ட இந்த கேப்சூலுக்குள் ஒருவர் படுத்துக் கொண்ட பின்னர் ஒரு சுவிட்சை தட்டினால் அதற்குள் நைட்ரஜன் வாயு செலுத்தப்படும். இதனால் அதனுள் இருப்பவருக்கு ஆக்ஸிஜன் வாயுவின் அளவு குறைந்து வலியில்லாமல் ஒரு சில நிமிடங்களுக்குள் மரணம் ஏற்படும்.

ஸ்விட்சர்லாந்தில் குறிப்பிட்ட காரணங்களுக்காக தற்கொலை சட்டப்பூர்வ அனுமதியை பெற்றிருந்தாலும் கூட அந்த கேப்சூல் பாதுகாப்பற்றது என்றும் நைட்ரஜன் பயன்பாடு சட்டப்பூர்வமானது கிடையாது போன்ற காரணங்களுக்காகவும் கேப்சூலுக்குள் பெண்மணி மரணத்துக்கு உடந்தையாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *